தகவல் அறியும் உரிமை யாருக்காக எதற்காக எனும் தொணிப் பொருளின் கீழ் மக்கள் கருத்தறியும் நிகழ்வு ஏதிர்வரும் செவ்வாய்க் கிழமை (18) காலை 9 தொடக்கம் மதியம் 1 மணிவரை மட்டக்களப்பு
ஈஸ் லகூண் ஹொட்டலில் நடைபெற ஏற்பாடுகள் செய்துள்ளதாக யுத்தம் மற்றும் சமாதானங்கள் தொடர்பில் அறிக்கையிடும் அமைப்பின் திட்ட முகாமையாளர் சட்டத்தரணி முகமது அஸாட் வெள்ளிக்கிழமை (14) தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ், மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ்மா அதிபர் டப்ளியு.ஜே.யாக்கொட ஆராச்சி, சட்டத்தரணிகளான ஜெகத் லியனாராச்சி, கே.ஐங்கரன், மற்றும், அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன்போது தகவல் அறியும் சட்டம் தொடர்பான கலந்துரையாடலும், இவ்விடையம் தொடர்பில் சட்டத்தரணிகளால் விளக்கங்களும் வழங்கப்படவுள்ளதாக முகமது அஸாட்; மேலும் குறிப்பிட்டார்.
0 Comments:
Post a Comment