2017ம் ஆண்டு மத்திய அரசாங்கத்தின் நிதியொதுக்கீட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வைத்தியசாலைகள் அபிவிருத்தியில் மட்டக்களப்பு
மாவட்ட தமிழ் வைத்தியசாலைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் திங்கட்கிழமை குறிப்பிட்டார்.
மாகாணசபை உறுப்பினர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில் குறித்த விடயம் தொடர்பாக தான் இரண்டு மூன்று தடவைகள் கடிதங்கள் அனுப்பியும், ஊடகங்கள் வாயிலாக தெரிவித்தும் இதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சு உறுதியளித்தும் இன்றுவரை நிதியொக்கவில்லை.
அம்பாறைக்கும் திருகோணமலைக்கும் அண்ணளவாக 650மில்லியன் ரூபாய் நிதி வைத்தியசாலைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் வைத்தியசாலைக்கு மத்திய அரசாங்கம் ஒரு ரூபாய்; நிதியினையும் ஒதுக்கவில்லை. இது தொடர்பாக அண்மையில் கொழும்பில் மத்திய அரசிக்கு சென்று இதுதொடர்பான விடயங்களை குறிப்பிட்டும் அனுமதிக்கப்படவில்லை எனவும் தெரியவருகின்றது. ஆகவே மத்திய அரசின் சுகாதார அமைச்சர் இது தொடர்பாக தமிழ் வைத்தியசாலைகளை தரமுயர்த்துவதற்கும், தமிழ் வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கும் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் வைத்தியசாலைகள் புறக்கணிக்கப்பட்டமை தொடர்பில் தமிழ் மக்கள் மத்தியில் தவறான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பல வைத்தியசாலைகள் இருந்தும். மட்டகளப்பு மாவட்ட தமிழ் வைத்தியசாலைகள் புறக்கணிக்கப்படுவது. ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே சுகாதார அமைச்சர் அவர்கள் தரமுயர்த்துவதற்குரிய வேலைகளையும் அபிவிருத்தி வேலைகளையும் செய்வார் என நம்புகின்றோம். இவை செய்யப்படாத நிலையில் அனைவரும் கூடி தீர்க்கமான முடிவு ஒன்றினை மேற்கொள்வோம் எனவும் குறிப்பிட்டார்.
0 Comments:
Post a Comment