மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இரத்தவங்கியில் இருந்து நாளொன்றிற்கு 50தொடக்கம் 60 வரையிலான எண்ணிக்கையிலானவர்களிடமிருந்து பெற்ற இரத்தம் தலைசீமியா, புற்றுநோய்
போன்ற நோய்களுக்கு உள்ளானவர்களுக்கு செலவு செய்யப்படுகின்றது என மட்டக்களப்பு மாவட்ட இரத்த வங்கி பொறுப்பாளர் டொக்டர் க.விவேகானந்தன் குறிப்பிட்டார்.
முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இரத்ததான நிகழ்வில் கலந்து கொண்டு கூறுகையிலேயே இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர், குறிப்பிடுகையில் இரத்தம் வழங்குவதில் அனைத்து தரப்பினரும், ஆர்வம் காட்டுவது சிறப்புக்குரியதாகும். அண்மைக்காலங்களாக மாவட்டத்தில் உள்ள விவசாய அமைப்புக்களும், பாடசாலைகளும், அரச திணைக்களங்களும் இரத்தத்தினை வழங்கும் பொருட்டு இரத்தான நிகழ்வுகளை நடாத்தி வருகின்றது. இவ்வாறாக பெற்றுக்கொள்ளப்படும் இரத்தங்கள் தலைசீமியா, புற்றுநோய் போன்ற நோய்யினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்தப்படுகின்றது.
குருதியினை பெறும்பொருட்டு பத்து அல்லது பதினைந்து பேர் வழங்குகின்ற இடங்களுக்கும் சென்று தாம் குருதியினை பெற்றுக்கொள்வதாகவும் இதன்மூலமாக குறித்த அளவான இரத்தங்களை பெற்றுக்கொள்ளக்கூடியதாவிருப்பதாகவும், இவ்வாறான செயற்பாடுகளுக்கு பாடசாலைகள் முன் வந்துள்ளமை பாராட்டத்தக்கது எனவும் தெரிவித்தார்.
இதன்போது மாணவர்கள், அதிபர், ஆசிரியர்கள், பொதுமக்கள் ஆகியோர் குருதி வழங்கினர்.
0 Comments:
Post a Comment