வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், குறித்த பெண்ணை வைத்தயசாலையில்
ஒப்படைத்த ஆண் ஓருவரை தேடிவருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது…..
அம்பாறை மவாட்டத்தின் மருதமுனையைச் சேர்ந்த யுவதி ஒருவரை சுயவீனமுற்ற நிலையில் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு ஆண் ஒருவர் வியாழக்கிழமை (13) மாலை தனது காரில் ஏற்றிக் கொண்டு வந்து அனுமதித்துள்ளார். குறித்த யுவதியை மேலதிக சிகிச்சைகளுக்காக உடனே அம்பியூலானஸ் வண்டிமூலம் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு குறித்த யுவதி அனுமதிக்கபட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறித்த யுவதியை வைத்தியசாலையில் அனுமதித்த ஆண்ணின் கார் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த இடத்திற்கு வெள்ளிக்கிழமை (14) மட்டக்களப்பு பொலிஸ் சொக்கோ பிரிவினர் வரவளைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு குறித்த காரின் உரிமையாளர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை தேடி வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment