எதிர் காலத்தில் மழை, மற்றும் வரட்சி, காட்டு யானைத்தாக்கம் போன்ற அனர்த்தங்களால் நாம் பாதிப்படையலாம். இதுவரையில் 3 மாணவர்கள் காட்டு யானைகளின் தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளார்கள். இவ்வாறான அனர்த்தங்களிலிருந்து
நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகளை மாணவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
என மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் க.சத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அனர்த அபாய குறைப்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான் தோன்றீஸ்வரர் ஆலய முன்றலில் வியாழக் கிழமை (13) நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வின்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…
தாய்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகளில் நமது நாட்டில் நடைபெறும் அனத்தங்களைப்போன்று பன்மடங்கு நடைபெறுகின்றன ஆனால் அங்கு உயிரிழப்புக்கள் மிகவும் குறைவாகவுள்ளன. அந்நாடுகளில் மக்கள் விழிப்பூட்டப்பட்டு மக்கள் நன்கு பயிற்றுவிக்கப் பட்டிருக்கின்றார்கள். தாய்லாந்தில் வருடத்தில் 3 தடவைகள் வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றன, வெள்ளம் வடிந்த பின்னர் ஏற்படும் நோய்களிலிருந்து பாதுகாப்பதற்காக வேண்டி அந்நாடு பாடசாலைகளுடாகவே அனர்த்த பாதுகாப்பு குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது. அதுபோன்று இவ்வாறான விடையத்தை பாடசாலைகளுடாகவே கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கோடு மட்டக்களப்பு கச்சேரி செயற்படுகின்றமை பாராட்டத்தக்க விடையமாகும்.
இவ்வாறு ஏற்படுகின்ற நிகழ்வுகளின் மூலம் மாணவர்கள் அறிவினைப் பெற்று
அதனை கிராம மட்டங்களில் அறிமுகப்படுத்தி எதிர் வரும் காலங்களில் எவ்வாறான அனர்த்தங்கள் நிகழ்ந்தாலும் அவற்றை நாம் முகம் கொடுத்து ஏற்படும் சவால்களை சமாளிக்கக் கூடியவர்களாக பயிற்றுவிக்கப்பட வேண்டும். இதற்காக மாணவர்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.
எதிர்வரும் காலங்களில் பல அனர்த்தங்களை எதிர் கொள்ள நேரிடலாம் என பல கருத்துக்கள் பிரஸ்த்தாபிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அனர்த்தங்கள் ஏற்படுவதை எங்களால் யாராலும் தடுக்க முடியாது ஆனால் அதனால் ஏற்படும் உயிரிழப்பு, ஏனை சொத்துக்கள், ஆவணங்கள் போன்ற இழப்புக்களை நாம் தடுத்துக் கொள்ளலாம். எனவே நாம் அனைவரும் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment