மூந்தனை ஆற்றிலிருந்து அது கடலோடு சங்கிமிக்கின்ற இடம் வரையில் செயற்பாடுளை மேற்கொள்வதற்கு உலகவங்கி தற்போது ஆய்வுகளை செய்து கொண்டிருக்கின்றது. இந்த மாவட்டத்தின் வெள்ளத்தையும் அதுபோல் வரட்சியைம் தீர்ப்பதற்கான படிமுறைகள் ஏறக்குறைய இன்னும் ஒரு வருட கலத்திற்குள் முடிவுறுத்தப்பட்டு
அதற்கான திட்ட வரைபுகள் முன் வைக்கப்பட்டு நிதி வசதிகள் பெறப்பட்டு இதற்குரிய செயற்பாடுகளை நாம் மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும். இதன்மூலம் இந்த மாவட்டத்தினுடைய வெள்ளம் வரட்சி இரண்டும் ஒரே நேரத்தில் குறைப்பதற்கான முடுழுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அனர்த அபாய குறைப்பு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான் தோன்றீஸ்வரர் ஆலய முன்றலில் வியாழக் கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்வின்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
வாழ்வதற்குச் சொல் எனும் தொணிப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்வில் அரச திணைக்களங்களின் தலைவர்கள், அதிபர் ஆரிசியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். இதில் அனர்த குறைப்பு தொடர்பான வீதி நாடகமும் நடைபெற்றது. இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…
அனர்த்தம் என்பது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சொந்தமாகிப் போய்விட்ட தொன்றாகும். வெள்ளம், வரட்சி, மற்றும் சுனாமி போன்ற அனர்த்கங்களுக்கு இங்குள்ள மக்கள் முகம் கொடுத்து வருகின்றார்கள். அனத்தங்களைக் குறைத்துக் கொள்வது எவ்வாறு அனர்த்தங்களோடு வாழ்வது எவ்வாறு, அனரத்தங்களிலிருந்து மீண்டெழுவது எப்படி, அனத்தங்களோடு வாழப் பழகிக் கொள்வது எவ்வாறு, போன்ற விடையங்களை உள்ளடக்கி அனர்த்த செயற்பாடுகள் வடிவடைக்கப் பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 3, 4 வருடங்களாக அனைத்து அனர்த்த வேளைகளிலும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு பூரண உதவிகளை நல்கி வருகின்றது. அதனூடாக மக்களின் அனைத்து செயற்பாடுகளையும் நாம் நேர்தியாக செய்திருக்கின்றோம்.
2014 ஆம் ஆண்டு 8 தண்ணீர் வவுசர்களை பிரதேச சபைகளுக்கு பகிர்ந்தழித்திருந்தோம், கடந்த வாரம் 80 இற்கு மேற்பட்ட நீர்த் தாங்கிகளை பிரதேச சபைகளுக்கு வழங்கியிருந்தோம், அத்தோடு நீர் வழிந்தோடக்கூடிய பல நீர்க் கால்வாய்களை புணரமைப்புச் செய்திருக்கின்றோம்.
மூந்தனை ஆற்றிலிருந்து அது கடலோடு சங்கிமிக்கின்ற இடம் வரையில் செயற்பாடுளை மேற்கொள்வதற்கு உலகவங்கி தற்போது ஆய்வுகளை செய்து கொண்டிருக்கின்றது. இந்த மாவட்டத்தின் வெள்ளத்தையும் அதுபோல் வரட்சியைம் தீர்ப்பதற்கான படிமுறைகள் ஏறக்குறைய இன்னும் ஒரு வருட கலத்திற்குள் முடிவுறுத்தப்பட்டு அதற்கான திட்ட வரைபுகள் முன் வைக்கப்பட்டு நிதி வசதிகள் பெறப்பட்டு இதற்குரிய செயற்பாடுகளை நாம் மேற்கொள்ளக் கூடியதாக இருக்கும். இதன்மூலம் இந்த மாவட்டத்தினுடைய வெள்ளம் வரட்சி இரண்டும் ஒரே நேரத்தில் குறைப்பதற்கான முடுழுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
உலக வங்கியின் உதவியோடு மத்திய நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு 880 மில்லியக் ரூபாய் வழங்கப்பட்டு, வெள்ள அணைகள் உட்பட பல்லேறு உட்கட்டமைப்பு வேலைகள் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றினை விட 280 மில்லியன் ரூபாய் செலவில் கேடாட்டமுனைப் பாலம் உயர்த்தும் செயற்பாடு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
றூகம் மற்றும் கித்தூள் ஆகிய இரண்டு குளங்களையும், இணைப்பதனூடாக மேலதிகமாக வெளியேறும் நீரை 60 வீதம் தேக்கி விவசாயத்திற்கு மட்டுமல்லாது உட்கட்டமைப்பு வேலைகளையும் மேற்கொள்ளும் பொருட்டு பிரான்ஸ ஏ.பி.சி. எனும் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடாத்தியிருக்கின்றோம். இதனை எதிர்வரும் 2017 டிசம்பர் மாத்திற்குள் இதற்கான வேலைகளை ஆரப்பிப்பதற்கு அந்நிறுவனம் உறுதி மொழி வழங்கியுள்ளது. இவ்வாறான பாரிய திட்டங்களிளூடாக இம்மாவட்டத்திலுள்ள மக்கள் இங்கு ஏற்படும் வெள்ளம் மற்றும் வரட்சி போன்ற அனரத்தங்களிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டு நிலைத்திருக்கின்ற அபிவிருத்தியை நோக்கி இம்மாவட்டம் முன்நெடுத்துச் செல்லப்படும்.
அபிவிருத்தி என்பது சரியாகத்திட்டமிட்டு சரியான நிபுணத்துவ ஆலோசனைகளுடன் மக்களின் பங்களிப்போடு நடைமுறைப் படுத்தப்படும்.
பாடசாலை மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களுடாக மாத்திரமின்றி பல விடையங்களுடாக அவர்களுக்கு கல்வி புகட்டப்பட வேண்டும். இதனூடாக பெற்றோர்கள், சமூகத்தினப் போன்றோர் அறிவுறுத்தப்பட்டு, சமூகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதுதான் எமது எதிர்பார்ப்பாகும்.
தொற்றா நோய்கள், போதைவஸ்த்து பாவனை, வறுமை, பாடசாலைக்கு மாணவர்கள் செல்லாமை, வேலைவாய்ப்பின்மை, போன்ற பல்வேறு சமூகப் பிரச்சனைகளுக்கு இம்மாவட்ட மக்கள் முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இவற்றைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளை மக்கள்தான் முன் வைக்க வேண்டும். மக்கள் ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் எதையும் திணிப்பதற்கு அரச நிருவாகம் முன்னிற்க மாட்டாது. மக்கள் ஏற்றுக் கொள்கின்ற தன்மை இல்லை என்கின்ற காரணத்திற்காக பல்வேறு திட்டங்கள் திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றன. எனவே மக்கள் தங்களது எதிர் கால சந்ததியினரையும் கருதிற் கொண்டு செயற்பட வேண்டும் அதுதான் இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கான படி என நாம் கருகின்றோம் என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment