நீண்ட வறட்சிக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மழை வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் பரவலாகப் பெய்;துள்ளது.
மட்டக்களப்பு நகரில் ஆகக் கூடிய மழை வீழ்ச்சியாக வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணிவரை 4.8 மில்லி மீற்றர் மழை கிடைக்கப் பெற்றுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி கே. சூரியகுமாரன் தெரிவித்தார்.
கடும் வறட்சியாக அதிக வெப்ப நிலையுடன் காணப்பட்ட கிழக்கு மாகாணத்தில் இப்பொழுது குளிரான காலநிலை நிலவுகிறது.
இதேவேளை தற்போதைய மழை வீழ்ச்சி பிற்பகலில் நாடு பூராகவும் எதிர்பார்க்கப்படுவதாகக் கூறியுள்ள வானிலை அவதான நிலையம் இடிமின்னல் பற்றி அவதானமாக இருக்குமாறும் எச்சரித்துள்ளது.
கடந்த இரண்டு மாதகாலமாக கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளிலும் நிலவிய அதிக வெப்ப நிலையின் காரணமான வறட்சியினால் குடி நீர்த் தட்டுப்பாடுஇ மரக்கறி உற்பத்திகள் வீழ்ச்சிஇ பால் கறக்க முடியாத நிலைமைஇ நோய்கள் என்பன போன்ற பாதிப்புக்கள் ஏற்பட்டிருந்தன.
0 Comments:
Post a Comment