கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களின் அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடல் நிகழ்வு இன்று கிழக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்கள மாவட்ட பிரதிப் பணிப்பாளர் காரியாலயத்தில் கிழக்கு
மாகாண விவசாய அமைச்சரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்களான இரா. துரைரெட்ணம், கோவிந்தம் கருணாகரம், ஞானமுத்து கிருஸ்ணபிள்ளை, இந்திரகுமார் பிரசன்னா, மார்க்கண்டு நடராசா ஆகியோரும், கிழக்கு மாகாண விவசாய அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் த. தங்கவேல்,கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பணிப்பாளர் கோகுலதாஸன், நீர்ப்பாசனத் திணைக்கள பிரதி மாகாணப் பணிப்பாளர் கணேசலிங்கம், மீன்பிடித் திணைக்களப் பணிப்பாளர் சுதாகரன், கால்நடை அபிவிருத்தித் திணைக்கள மட்டக்களப்பு மாவட்டப் பிரதிப் பணிப்பாளர் திருமதி உதயராணி குகேந்திரன், கூட்டுறவுத் திணைக்கள உதவி ஆணையாளர் கனகசுந்தரம் மற்றும் மேற்குறிப்பிட்ட திணைக்களங்களின் அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது ஒவ்வொரு திணைக்களங்களின் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் செயற்பாடுகள், மற்றும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பில் தனித்தனியாக ஆராயப்பட்டதுடன்,மாகாண சபை உறுப்பினர்களுக்கு அவை தொடர்பில் விளக்கங்களும் வழங்கப்பட்டன. அத்துடன் எதிர்காலத்தில் மேற்படி திணைக்களங்கள் மூலம் மாவட்ட மக்களுக்கு உரிய வகையிலான, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் கூடிய எவ்வாறான செயற்திட்டங்களை, முன்மொழிவுகளை எதிர்காலத்தில் மேற்கொள்ளலாம் என்பன தொடர்பிலான பல விடயங்கள் இக்கலந்துரையாடலில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment