தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக வேண்டி இவ்விடையம் தொடர்பிலான கேள்வி பதிலுடன் கூடிய மாபெரும், விவாத அரங்கு ஒன்றை எதிர் வரும் 18 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை காலை மட்டக்களப்பில்
நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக யுத்த மற்றும் சமாதானங்களுக்கான அறிக்கையிடல் அமைப்பின் இலங்கைக்கான நாட்டுப் பிரதிநிதி முகமட் அஸாட் தெரிவித்தார்.
சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று புதன் கிழமை (05) மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற அமைப்புக்களின் ஓன்றியம் (இணையம்) காரியாலயத்தில் நடைபெற்றது. இதில் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் கடமை புரிகின்ற சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மற்றும் ஊடகவியலாளர்கள், யுத்த மற்றும் சமாதானங்களுக்கான அறிக்கையிடல் அமைப்பின் பிரதிநிதிகள், ஊடக தொழிற் சங்க சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் லங்காபேலி உட்பட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர். இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதில் அவர் மேலும் தெரிவிக்கையில்….
தனியே சிவில் சமூகத்தினர் மாத்திரம் மக்கள் மத்தியில் வேலைகளை முன்னெடுத்துச் செல்லும்போது சிற்சில சிக்கல்கள் எழுகின்றன. இவ்வாறான சிக்கல்களைக் குறைப்பதற்காக வேண்டி மற்றுமொரு சிவில் அமைப்பாக இயங்குகின்ற ஊடகவியலாளர்களுடன் இணைந்து செயற்படும்போது மக்கள் மத்தியில் பல வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு இலகுவாக அமைகின்றது.
இலங்கை வரலாற்றில் சிவில் அமைப்புக்களும், ஊடகவியலாளர்களும் ஒன்றிணைந்து வேலை செய்யும் செயற்பாடானது எமது இச்செயற்பாடாகத்தான் இருக்கின்றது. சிவில் அமைப்புக்களால் தீர்க்கப்படாத மக்களின் பிரச்சனைகள் பல ஊடகவியலாளர்களின் தலையீடுகளால் தீர்வு காணப்பட்டுள்ளன. எனவே இந்த இணைப்பை இடை நடுவே விட்டு விடாமல் தொடர்ச்சியாகப் பேணி வந்தால் மக்களின் பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது இலகுவாக அமைகின்றது.
கடந்த காலங்களில் இலங்கையில் பல சிற்சில சட்டங்கள வந்துள்ளன ஆனால் எந்த அளவிற்கு அவை நடைமுiறியல் உள்ளன என்பதை நாம் சிந்திக்க வேண்டும். இந்நிலையில்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டமும் இலங்கை நாடாளுமன்றினால் அங்கீகரிக்கப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ளது. இவற்றை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லவேண்டியதும் எமது கடப்பாடாகும். இச்சட்டத்தில் என்ன, என்ன விடையங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன, இதனால் மக்களுக்கு எவ்வாறான நன்மைகள் உள்ளன போன்ற பல விடையங்களைத் தெழிவு படுத்தும் நோக்கில் எதிர்வரும் 18 ஆம் திகதி மட்டக்களப்பில் விவாத அரங்கு ஒன்றை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்து. இதில் கிழக்கு மாகாணத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட ஊடகவிலாயர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், அரசாங்க அதிகாரிகள் போன்ற பலரை உள்ளடக்கியதாக 100 இதில் கலந்து கொள்ளவுள்ளனர். இதன்போது பல திறமைவாய்ந்த வளவாளர்கள் கலந்து கொண்டு கேள்விகளுக்குப் பதிலளிக்கவுள்ளனர்.
இதுபோன்ற நிகழ்வை கடந்த 29 ஆம் திகதி ஊவா வெல்லாஸவில் நடாத்தியிருந்தோம், இந்நிலையில் எதிர் வரும் 17 ஆம் திகதி வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி வவுனியாவிலும், 18 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தி மட்டக்களப்பிலும் நடாத்த திட்டமிட்டுள்ளோம். என அவர் மேலும் குறிப்பிட்டார்.
0 Comments:
Post a Comment