கடந்த செப்ரெம்பெர் மாதம் 11 ஆம் திகதி ஏறாவூரில் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு ஒக்ரோபெர் 05ஆம் திகதிவரை விளக்கமறியலில்
வைக்கப்பட்டிருந்த 6 சந்தேக நபர்களையும் மேலும் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சந்தேக நபர்கள் அறுவரும் மாவட்ட மேலதிக நீதிபதி எம்.ஐ.எம். றிஸ்வி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர்.
இச்சந்தேக நபர்கள் சிறைச்சாலை அதிகாரிகளால் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டு நீதி மன்றத்தில் ஆஜராக்கப்பட்ட வேளை நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
ஏறாவூர் ஆதார வைத்தியசாலை பின் ஒழுங்கையைச் சேர்ந்த இஸ்மாயில் முஹம்மது பாஹிர் (வயது 24- கொல்லப்பட்ட பெண்ணின் கணவனுடைய சகோதரன்), அப்துல் மஜீத் மாவத்தை ஐயங்கேணியைச் சேர்ந்த வசம்பு என்றழைக்கப்படும் உஸனார் முஹம்மது தில்ஷான் (வயது 29), பாடசாலை வீதி மீராகேணியைச் சேர்ந்த கலீலுர் ரஹ்மான் அஹம்மது றாசிம் (வயது 23), பள்ளியடி வீதி, காவத்தமுனை, ஓட்டமாவடியைச் சேர்ந்த புஹாரி முஹம்மது அஸ்ஹர் (வயது 23), ஏறாவூர் நகர் போக்கர் வீதியைச் சேர்ந்த இஸ்மாயில் சப்ரின் (வயது 30), மற்றும் ஏறாவூர் காட்டுப்பள்ளி வீதியைச் சேர்ந்த அபூபக்கர் முஹம்மது பிலால் (வயது 50) ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களாவர்.
ஏறாவூர் நகர பிரதேசத்தில் முகாந்திரம் வீதி முதலாவது குறுக்கு ஒழுங்கையிலுள்ள வீட்டில் வசித்துவந்த தாயான நூர்முஹம்மது உஸைரா (வயது 56) அவரது திருமணமாகிய மகளான ஜெனீரா பானு மாஹிர் (வயது 32) ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களின் சடலங்கள் கடந்த 11.09.2016 அன்று பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தன.
ஏறாவூரில் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புட்ட சான்றுப் பொருட்கள் விஞ்ஞான ரீதியான உறுதிப்படுத்தலுக்காக அரச பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பி வைப்பதற்காக கடந்த 23.09.2016 அன்று ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
பொலிஸார் மற்றும், மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸார் ஆகியோரால் 17 சான்றுப் பொருட்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்;தன.
0 Comments:
Post a Comment