தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு நாடு பூராகவும் பல்வேறுபட்டநிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில்மட்டக்களப்பு தேற்றாத்தீவு பொது நூலகம்
மற்றும் வாசகர் வட்டத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இலவச பற்சிகிச்சை முகாம் தேற்றாதீவு சிவகலை வித்தியாலயத்தில் புதன் கிழமை (19) நடைபெற்றது.
அண்மையில் 180 மாணவர்களுக்கான பற்சுகாதார விழிப்புணர்வு நடைபெற்று தேர்வு செய்யப்பட்ட 80 மாணவர்களுக்கு இலவச பல்புடுங்குதல் பல் துப்பரவு செய்தல் மற்றும் பற்களை நிரப்புதல் ஆகிய மருத்துவ சிகிச்சைகள் பற்சிகிச்சை நிபுணர் டாக்கடர் கதிரேசப்பிள்ளை மேகநாதன் மற்றும் பல் வைத்தியர் டாக்டர் லோஜினி ஆகியோரின் சிகிச்சை முறையின் கீழ்இடம்பெற்றது.
இந் நிகழ்வில் தேற்றாத்தீவு பொது நூலக நூலகர் ரமணி ஜெயபாலன் சன சமூக உத்தியோகஸ்தர் பிரபாஜினி நூலக உதவியாளர் சந்திராதேவி மற்றும் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இன்றய காலத்தில் தூர இடங்களுக்கு சென்று இவ் வாறான பற் சிகிச்சைகளைமாணவர்கள் மேற்கொள்கின்ற நிலையில் அச் சிகிச்சை முறைகளை நடமாடும் இவ் பல் வைத்திய சேவைகளினூடாகஇலவசமாகப் பெற்றுக் கொள்கின்றமை மாணவர்களுக்கு பெரிதும் பயன் கிடைக்க கூடியதாகவுள்ளமை முக்கியஅம்சமாகும்.




0 Comments:
Post a Comment