தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டடத்தின், வாகரைப்பிர தேசசபையின் கீழ் இயங்கும் நூலகங்கள் மற்றும் வாசிப்பு நிலையங்கள் ஊடாக பல்வேறு
வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வாகரை பிரதேச சபையின் சனசமூக உத்தியோகஸ்தர் .ஹாரூன்,
அதன் ஓர் அங்கமாக வாகரை வேல்ட் விஷன் நிறுவனத்தின் அனுசரனையுடன் வாகரை மற்றும் கதிரவெளி பொது நூலகங்களில் தொழில் நுட்பத்தின் ஊடாக வாசிப்புத்திறனை எவ்வாறு மேம்படுதலாம் என்ற தலைப்பின் கீழ் வாகரை பால்ச்சேனை கதிரவெளி ஆகிய பாடசாலைகளில் கல்விப் பொதுத்தர உயர் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கான செயலமர்வு செவ்வாய்க் கிழமை (18) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஹாரூன், வேல்ட்விஷன் நிறுவனத்தின் கல்விப்பிரிவுக்குப் பொறுப்பான திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜன், வாகரை பிரதேச சபை நிதி உதவியாளர் ஜெயரூபன் ஆகியோருடன் வளவாளராக வேல்ட்விஷன் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப பிரிவுக்குப்பொறுப்பான உத்தியோகத்தர் ரமிஸ்டன் உளவள ஆலோசனை வைத்தியர் ஜுலி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இக்கருத்தரங்;கின் மூலம் மாணவர்கள் தமது கல்வித்தேடலில் எவ்வாறு இணையத்தினை பயன்படுத்தலாம்என்ற அறிவினையும் தகவல் தொடர்பாடல் நுட்பங்களினையும் அறிந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment