நாங்கள் அழிக்கப்பட்ட,ஒழிக்கப்பட்ட, காணாமற்போன சமூகத்தின் பிரதிநிதிகள் ஆவர். நாம் கல்வியால் அடையாளப்படுத்தப்பட்ட சமூகமாகும்.கல்வியால் வளர்ந்த சமூகமாகும்.மூன்று தசாப்தங்களுக்கு முன்பு இந்த இலங்கையிலே அனைத்து உயர்பதவிகளிலும் இருந்தவர்கள் தமிழர்கள்தான்.கல்வியால் வளர்ந்த சமூகம் அதனை இழந்து நிற்கின்றது.
நாம் உரிமைக்காக இழக்க கூடாதவற்றை அனைத்தையும் இழந்து நிற்கின்றோம். மீண்டும் இந்த தமிழ்சமூகம் இந்த தேசத்திலே தலைநிமிந்து நிற்கவேண்டுமானால் கல்வியூடாகவே தலைநிமிந்து நிற்கமுடியும்.
என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சா.வியாளேந்திரன் தெரிவித்துள்ளார். மட்.கல்லடி விவேகானந்தா வித்தியாலத்தில் வெள்ளிக்கிழமை (30) மாலை நடைபெற்ற பரிசளிப்பு விழாவின்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்..
இன்று நல்லாட்சி அரசிலே அரசியல் யாப்புமாற்றம் நடந்து கொண்டிக்கின்றது.இதில் தமிழ்மக்கள் எதிர்பார்க்கும் தீர்வானது மூன்று தசாப்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் இழப்புக்கான நிவாரணத்தீர்வாகும்.இது கிடைக்கும் எனவும் சொல்லவில்லை.அதற்காக கிடைக்காது எனவும் சொல்லவில்லை.ஆனால் இந்தநாட்டின் சிறுபான்மை இனமாக இருக்கின்ற மக்களாகிய நாம் சொல்வதை, பேசுவதை இந்த நாட்டின் பெருபான்மை சமூகம்,பெருபான்மை சமூகத்தின் அரசியல் தலைவர்கள் கேட்க வேண்டுமானால் அவர்கள் கேட்கின்ற இடத்துக்கு செல்லவேண்டும்.அந்த இடம்தான் கல்வியாகும்.
தமிழ்மக்களின் தீர்வுத்திட்டத்தை நோக்கி செல்லும் இந்த நேரத்திலே நாட்டில் நல்லாட்சி அரசை உருவாக்கும் முயற்ச்சியிலே சிறுபான்மையின மக்களின் பங்களிப்பு இருந்திருக்கின்றது.இப்போதும் கூட நல்லாட்சி அரசில் நல்லதீர்வு கிடைக்கும் என்று தமிழ்மக்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றார்கள்.அதனால் இந்த நல்லாட்சி அரசோடு நாங்கள் ஒத்துப்போகின்றோம்.எங்களால் உருவாக்கப்பட்ட இந்த கூட்டுயரசு, நல்லாட்சி அரசை குழப்பாமல்; இந்த நல்லாட்சி அரசிலிருந்து எமது தமிழ்மக்களுக்காக கிடைக்ககூடிய நல்லவிடங்களை பெற்று ஆகவேண்டும்.அதற்காக நாங்கள் இராஜதந்திரத்தோடு மிகவும் உன்னிப்பாக செயற்படுகின்றோம்.
பலர் நினைக்கலாம் தமிழ்தேசியக்கூட்டமைப்பு பார்த்துக்கொண்டிருக்கின்றது. இந்த அரசோடு பெறக்கூடிய அனைத்தையும் முழுமையாக பெற்றாகவேண்டும்.இதுதான் முக்கியம்.கடந்த அரசில் மிகமோசமான அழிவுகளை சந்தித்து இருக்கின்றோம்.ஆனால் இந்த அரசில் ஒரு சுதந்திரமான சூழல் இருக்கின்றது.ஆனால் நான் உறுதிப்பட சொல்லவில்லை.மட்டக்களப்பு மாவட்டம் 2624.19 சதுர கிலோமீற்றர் கொண்ட மிகப்பெரிய மாவட்டமாகும்.
இன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புறங்கள் குறிப்பாக மயிலந்தனைமடு,மாதவண்ணை பகுதிகளில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட நிலக்காணிகள் வேறுமாவட்டத்தை சேர்ந்தவர்களால்,வேறு சமூகத்தினரால் சிங்களசமூகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்களால் அத்துமீறி, காடுகள் அழிக்கப்பட்டு காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளது.இந்த நல்லாட்சி அரசிலே முழுமையாக இன்னும் சில விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை.மீள்குடியேற்றம் சரியாக இடம்பெறவில்லை.
அரசியல் கைதிகள் முழுமையாக விடுதலை செய்யப்படவில்லை. இது கடந்த அரசில் இருந்து தொடர்ந்து வருகின்றது.ஆனால் இந்த அரசில் புதிதாக நடக்கும் சிலசெயற்பாடுகள் ஆகும்.இது எமது மாவட்டத்தின் எல்லைக்குள் திட்டமிட்டு நுழைவதாகும்.ஆயிரம் எக்கர் காணிகளை அழிப்பது அதிலே வேணுமேன்றே குடியேற்றங்களை ஏற்படுத்தி விகாரைகளை அமைப்பதாகும்.இந்த அரசு,அரசோடு சேர்ந்த, அரசுக்கு சம்பந்தமாக யாராக இருந்தாலும் அதனை செய்தால்நல்லாட்சி அரசாங்கத்தின் மீது சிறுபான்மையின மக்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கையை இழக்கச்செய்யும்.
வடகிழக்கில் சிங்களமக்கள் பூர்வீககுடிகளாக குடியிருந்தால், குடியிருந்த இடத்திற்கு குடியேறுவதற்கு நாங்கள் அனுமதிக்கின்றோம்.அதனை வரவேற்கின்றோம்.இந்தநாட்டில் இனவாதம்,மதவாதம்,பிரதேசவாதம் பேசவரவில்லை.நான் அறிந்த காலம்முதல் தமிழ்மக்கள் இந்தநாட்டில் மற்ற சமூகத்தின் காணிகளை அத்துமீறி பிடித்து கபளீகரம் செய்யவில்லை.எந்த வணக்கஸ்தலங்களையும் கேவலப்படுத்தி அதனை இதுவரையும் உடைக்கவில்லை.
இனியும் உடைக்கமாட்டார்கள்.இந்த இலங்கைச்சரித்திரத்தில் அதனை பார்க்கமுடியாது.ஆனால் ஒருசில இனவாத,மதவாதத்தலைவர்கள், தலைமைத்துவங்கள் மீண்டும் நாட்டிலே யுத்தத்தை ஏற்படுத்தி நாட்டினை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்வதற்கு கங்கணம் கட்டிக்கொண்டிருக்கின்றது.கடந்த காலத்தில் இனஅழிப்பு செய்த மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான எதிர்கட்சி தலைவர்கள் மீண்டும் இரத்தயாற்றை ஓடவைப்பதற்கு பொதுபலசேனா எனும் பௌத்த அமைப்புக்களை திரட்டி மீண்டும் இனவாதத்தை உருவாக்கி நாட்டிலே குழப்பத்தை உண்டுபண்ணி தான் ஆட்சிக்கு வரவேண்டும் என சிந்திக்கின்றார்கள்.அது பிழையான விடயமாகும்.
அண்மையில் பொதுபலசேனா அமைப்பைச் சேர்ந்த பௌத்தபிக்கு சொன்னார் "தமிழர்கள் இந்தநாட்டைவிட்டு செல்லவேண்டும் என்று" நாங்கள் ஒத்துக்கொள்கின்றோம்.நாங்கள் தமிழ்நாட்டுக்கு போகின்றோம்.எங்களுக்கு முன்பு இந்தநாட்டினுடைய பெருன்பான்மை மக்கள் செல்லவேண்டும்.அங்கிருந்துதான் அவர்கள் வந்தவர்கள்தான். நாங்கள் நாட்டின் பூர்வீககுடிகள் ஆவர்.நாங்கள் மதவாதத்தையோ,இனவாதத்தையோ, பிரதேசவாதத்தையோ விரும்பவில்லை.நாங்கள் ஏற்படுத்திய இந்த நல்லாட்சி அரசிலிருந்து நீதியான,நியாயபூர்வமான நிவாரணத்தை கேட்டு நிற்கின்றோம் அவர் மேலும் குறிப்பிட்டார்.
0 Comments:
Post a Comment