2 Oct 2016

சட்டத்தினால் தண்டிக்கப்படாதவர்கள் எத்தனையோ போர் உள்ளார்கள், நீதிபதி கணேசராஜா.

SHARE
சட்டத்தினால் தண்டிக்கப் படாதவர்கள் எத்தனையோ போர் உள்ளார்கள். ஆனால் சட்டத்தினால் தண்டிக்கப்படா விட்டாலும் தெய்வ தண்டனையிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. பெற்றோர்களும், ஆசிரியர்களும், இதனை பிள்ளைகள் மத்தியில் விதைக்க வேண்டும்.
என மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியும், மேலதிக மாவட்ட நீதிபதியுமான மா.கணேசராஜா தெரிவித்துள்ளார்.

சர்சதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு களுவாஞ்சிகுடி நீதி நிருவாகப் பிரிவின் கீழ் பட்டிருப்பில் அமைந்துள்ள நன்நடத்தை அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச சிறுவர் தின நிகழ்வு மட்டக்களப்பு - களுதாவளை கலாசார மண்டபத்தில் நன்னடத்தைப் பெறுப்பதிகாரி மா.வரதராஜன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் அவர் மேலும் குறிப்பிடுகையில்….

ஒருவர் எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டும் வாழ்க்கையில்  சந்தோசம் மிக முக்கியம். வாழ்க்கையை சந்தோசமாகப் பழகிக் கொண்டால் எல்லாமே சாத்தியமாகும். யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் டாக்டராக அல்லது எஞ்சினியராக வரவேண்டும் என்றுதான் எதிர் பார்ப்பார்கள். ஆனால் அவற்றிலிருந்து விலகி  என்னுடைய  விருப்பத்தின் பிரகாரம் நான் தற்போது எனது கடமையை சந்தோசமாகவும், திருப்தியுடன் மேற்கொள்கின்றேன். அதுபோல் பிள்ளைகள் எப்படி வரவேண்டும் என விரும்புகின்றார்களோ அவர்களை அத்துறையில் ஊக்குவியுங்கள்

பாரி மன்னன் ஒரு கம்பைக் நட்டு விட்டுப் போவதற்குத் தெரியாமல் தேரைக் கொடுத்துவிட்டுப் போகவில்லை அவ்வளவு வள்ளலாகக் காணப்பட்டார். அதுபோல் மனுநீதி கண்ட சோள மன்னனின் செயற்பாடு உயரிணை என்றாலும் அகறிணை என்றாலும் ஒன்றேதான் என்ற நெகிழ்வுத்தன்மையை உணர்த்துகின்றது. பாண்டிய மன்னன் வழங்கிய நீதி தவறு என்ற செய்தி கேட்ட உடனேயே உயிரையே விட்டு விட்டான்.  அந்தக் காலத்தில் மன்னர்கள்தான் நீதி வழங்கினார்கள். இவ்வாறான சிந்தனைகளை பிள்ளைகள் மத்தியில் விதைக்க வேண்டும். இவ்வாறான சிந்தனைகளை பிள்ளைகள் மத்தியில் ஊட்டக்கூடிய பெற்றோர்கள் வளரவேண்டும்.

புராணங்கள், இதிகாசங்கள், தொடர்பில் நல்ல விடையங்களை பிள்ளைகளுக்கு ஊட்ட வேண்டும் எமெககெல்லாம் எப்போதும் ரென்ஸன், பார்க்கும் விடையங்களிலெல்லாம் ரென்ஸன், பொய்சொல்பவர்கள், கழவெடுப்பவர்கள் போன்ற குற்றவாழிகளைத்தான் தொடர்ந்து பார்க்கின்றோம், இவற்றிலிருந்து சற்று வேறுபடுத்தி இவ்வாறான நிகழ்வுகளில் கலந்து கொள்வதானது மனதில் அமைதி ஏற்படுகின்றது. இவை ஒருவகையில் தியானமாகும்.

நாங்கள் செய்யும் தவறுகளுக்கு சட்டத்தினால் தண்டிக்காமல் இருக்கலாம் ஆனால் அதற்குரிய பலன் மீண்டும் எமக்கு திரும்பி வரும். நாம் விடும் ஒவ்வொரு தவறுகளுக்கும் அனுபவிக்க வேண்டிவரும், இவை ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ளது.

தற்போது குடித்துவிட்டு மனைவி பிள்ளைகளுக்கு அடிக்கின்றார்கள், இவைகளைப் பார்திருக்கின்ற பிள்ளை தந்தைக்கு ஓர் நாள் அடிக்கத்தான் செய்யும். இந்நிலையில்தான் பிள்ளைகளுக்கு ஆன்மீக் சிந்தனைகளை சிறுவயதிலிருந்தே வளர்க்க வேண்டும். 

சட்டத்தினால் தண்டிக்கப்படாதவர்கள் எத்தனையோபோர் உள்ளார்கள். ஆனால் சட்டத்தினால் தண்டிக்கப்படா விட்டாலும் தெய்வ தண்டனையிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. பெற்றோர்களும், ஆசிரியர்களும், இதனை பிள்ளைகள் மத்தியில் விதைக்க வேண்டும். என அவர் தெரிவித்தார்.

இதன்போது ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை மற்றும், பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட திறமையான மாணவர்களுக்கு நன்நடத்தைக் காரியாலயத்தினால் பரிசில்கழும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.



















SHARE

Author: verified_user

0 Comments: