2 Oct 2016

யானையில் இருந்து பாதுகாக்க காவாலாளர்களை நியமிக்க தீர்மானம்

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்ற யானையின் தாக்குதலினால் பயிர்ச்செய்கைகள், உயிர்சேதங்கள் இடம்பெற்றுவருகின்ற நிலையில் இதனை கட்டுப்படுத்தும்படி வியாழக்கிழமை (29) நடைபெற்ற மண்முனை தென்மேற்கு பிரதேச விவசாய ஆரம்பகூட்டத்தில்
விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய எல்லைப்பகுதியில் காணப்படுகின்ற மின்சார வேலி அமைக்கப்பட்டுள்ள இடங்களில் இருக்கின்ற ஆறு கதவுகளின் ஊடாகவே யானைகள் உள்நுழைவதாகவும் அதனை தடுத்தால் யானைத்தாக்குதலை இல்லாமல் செய்ய முடியும் என மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் குறிப்பிட்டார்.

ஆறு கதவுகளுக்கும் ஒரு கதவுக்கு இரண்டு நபர்கள் வீதம் பன்னிரெண்டுபேரினை நியமித்து காவல்புரிய வைப்பது என்றும் அவர்களுக்குரிய கொடுப்பனவுகளை மாவட்ட செயலகத்தின் ஊடாக வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.

அவற்றிற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் மேலதிக அரசாங்க அதிபர் கிரிதரன் உறுதியளித்தார்.


மட்டக்களப்பு மாவட்ட ஏனைய பிரதேச செயலகங்களில் நடைபெற்ற ஆரம்ப கூட்டங்களில் அதிகளவான திணைக்களங்களின் மாவட்ட பணிப்பாளர்கள் கலந்து கொண்டார்கள் ஆனால் மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்கான விவசாய ஆரம்ப கூட்டத்தில் திணைக்களங்களின் மாவட்ட உயரதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை இது அவர்களின் அசமந்தபோக்கா? என்ற வினாவினை கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை  இதன்போது கலந்து கொண்டு கேள்வி எழுப்பினார்

மாகாணசபை உறுப்பினர் தொடர்ந்தும் இங்கு குறிப்பிடுகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் அறுவடை செய்யும் நேரத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபை நெல்லை கொள்வனவு செய்வதில்லை இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்


கெவிளியாமடு மணல்ஏத்தம் போன்ற பகுதிகளில் 1965ம் ஆண்டு 1970ம் ஆண்டு காலப்பகுதியில் அங்கிருந்து இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் மீண்டும் அங்கு சென்று பயிர்செய்ய முடியாத நிலையால் காடுவளர்ந்துள்ளது. தற்போது துப்பரவு செய்கின்ற போது வனபரிபாலன சபை இதனை தடுக்கின்றார்கள். ஆனால் தேக்க, முதிரை மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்படுகின்றது இது உரிய திணைக்களங்களின் அதிகாரிகளுக்கு தென்படுவதில்லையா? எனவும் குறிப்பிட்டார்.
SHARE

Author: verified_user

0 Comments: