14 Oct 2016

போக்குவரத்துப் பொலிஸாரால் மாணவர்களுக்கு வீதிப் பயணப் பாதுகாப்பு பயிற்சி

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு சமூகமட்ட விபத்துக்களைக் குறைப்பதற்கான திட்டத்தின் கீழ் நடைமுறைப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக
சர்வோதய நிறுவன சமூகமட்ட விபத்துக்களைக் குறைப்பதற்கான திட்டத்தின்  வெளிக்கள உத்தியோகத்தர் ஜோசெப் ஸ்ரீயானி தெரிவித்தார்.

இதன் ஓர் அங்கமாக புதன்கிழமை (ஒக்ரோபெர் 13, 2016) மட்டக்களப்பு வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலய மாணவர்களுக்கு ஏறாவூர் போக்குவரத்துப் பொலிஸாரின் உதவியுடன் பாதுகாப்பான பயணப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.

மாணவர்களுக்கு வீதி ஒழுங்கு முறைகள், போக்குவரத்து சட்ட திட்டங்கள், அவசர உதவி உள்ளிட்ட பல்வேறு விடயங்களைப் பொலிஸார் தெளிவுபடுத்தினர்.

விபத்துக்கள் நிகழ்ந்த பின்னர் அதனால் உண்டான பாதிப்புக்களுக்கு பின்னர் பரிகாரம் காண்பதை விட விபத்துக்கள் ஏற்படும் முன்னர் அத்தகைய சந்தர்ப்பங்களிலிருந்து வருமுன் காத்துக் கொண்டால் அழிவுகளையும் அங்கவீனங்களையும், வீண் தொல்லைகளையும் தவிர்த்துக் கொள்ளலாம் என சர்வோதய நிறுவனத்தின் சமூகமட்ட விபத்துக்களைக் குறைப்பதற்கான திட்டத்தின் வெளிக்கள உத்தியோகத்தர் ஜோசெப் ஸ்ரீயானி தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஏறாவூர் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி ரீ.ஏ. சுதத், சர்வோதய நிறுவனத்தின் சமூகமட்ட விபத்துக்களைக் குறைப்பதற்கான திட்டத்தின் வெளிக்கள உத்தியோகத்தர் ஜோசெப் ஸ்ரீயானி உட்பட ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

SHARE

Author: verified_user

0 Comments: