27 Oct 2016

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு புத்தகங்கள் கையளிப்பு.

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குபட்பட்ட களுதாவனை பொது நூலகத்திற்கு ஒரு லெட்சட் ரூபாய் பெறுமதியான புத்தகங்களைக் கையளிக்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை (22) களுதாவளை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது சமயம், பொதுஅறிவு, விளையாட்டு, சுகாதாரம், கணணி, விஞ்ஞானம், உள்ளிட்ட பல விடையங்களை உள்ளடக்கிய ஒரு லெட்சம் ரூபாய் பெறுமதியாக புத்தகங்களை இலவசமாக களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத்தின் தலைவர் கா.வ.வேலாயுதபிள்ளை  மேற்படி பொது நூலகத்தின் நிருவாகம் மற்றும் வாசகர் வட்டத்தினரிடம் ஒப்படைந்தார். மேலும் இதன்போது களுதாவளையைச் சேர்ந்த சமூகசேவகரான அல்போன்ஸ் என்பவரும் ஒரு தொகுதி புத்தகங்களை மேற்படி பொதுநூலகத்திற்கு ஒப்படைத்தார்.

அண்மையில் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில்  இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றெடுத்த, மட்.களுதாவளை மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த ஜெ.ரிசானன், மற்றும், அவ்விளையாட்டுப் போட்டியில் வர்ணச்சாதனை பெற்ற கே.சந்திரகுமார், ஆகிய மாணவர்கள் இதன்போது பாராட்டப்பட்டு, வெற்றிக் கேடயங்களும் வழங்கப்பட்டன.

வாசகர் வட்டத் தலைவர் சு.சிவரெத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் எஸ்.குபேரன், சனசமூக அபிவிருத்தி உத்தியோகஸ்தர் டொறின் பிரபாலினி சுரேஸ் றோபட், மற்றும், ஆலய நிருவாகத்தினர், களுதாவளைக் கிராம பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.















SHARE

Author: verified_user

0 Comments: