26 Oct 2016

காணாமல் போனவர்களை அனுஸ்ட்டிக்கும் வருடாந்த நிகழ்வு

SHARE
இலங்கையில் காணாமற் போனோருக்கு நீதி கிடைக்கவும், மீண்டும் காணாமல் போதல் இடம்பெறாதிருக்கவும் என்ற நோக்குடன் 1991 ஆம் ஆண்டு முதல்
வருடாந்தம் நடைபெற்று வரும் காணாமற் போனோரை நினவு கூரும் இவ்வருடத்திற்கான நிகழ்வு வியாழக் கிழமை (27) காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணிவரை சீதுவை ரத்தொழுகம சந்தியில் நடைபெறவுள்ளது.

காணாமற் போனோரின் குடும்ப அங்கத்தவர்களின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் அரசியல், சிவில் சமூக அமைப்புக்கள், சமயப் பிரதிநிதிகள், மற்றும் சர்வதேச முகவர்கள், என பலர் அழைக்கப் பட்டுள்ளனர்.

மேலும் 11 ஆசிய நாடுகளில் 14 அமைப்புக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும்,  “காணாமற் போகச் செய்வதற்கு எதிரான ஆசிய பெடரேஷன்” , தென் கொரிய க்வான்ஜூ நகரின் மே 18 நினைவு மன்றம், மற்றும் மே 18 பாதிக்கப்பட்டோரின் மன்றம், ஆகிய அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பங்கு பற்றவுள்ளனர்.

விருந்தினர் உரைகள், குடும்ப அங்கத்தவர்களின் அனுபவப் பகிர்வுகள், ஒத்துழைப்பிற்கான தகவல்கனை முன்வைத்தல் போன்றன இதன்போது இடம்பெறவுள்ளதோடு, கலைஞர் ஜெயதிலக்க பண்டார அவர்களின் இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

காணாமற் போனோருக்கு நீதியை வழங்கவும், மீண்டும் காணாமல் போதலைத் தடுக்கவும், அரசு வழங்கி வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்ளவும், மனிதத்துவத்தைப் பேண ஊக்கமளிக்கவும், காணாமல் போனோரின் குடும்ப ஒன்றியம், இந்நிகழ்வில் கலந்து கொள்ள அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளது. மேலதிக விபரங்களுக்கு 0770633787 , 0775125351

SHARE

Author: verified_user

0 Comments: