20 Oct 2016

இலங்கையில் கல்வித் துறை தேர்தல் திணைக்களம் போன்று சுயாதீனமாக இயங்குவதற்கு வழிவகுக்க வேண்டும்

SHARE
இலங்கையில் கல்வித் துறை  தேர்தல் திணைக்களம் போன்று சுயாதீனமாக இயங்குவதற்கு வழிவகுக்க வேண்டும் அப்போதுதான் இந்த நாட்டில் மாணவர்கள் சுயாதீனமான கல்வியினை
மாணவர்கள் பெற்றுக் கொள்ள முடியும் என கிழக்கு மாகாண விசாய அமைச்சர் கி.துரைசாஜசிங்கம் தெரிவித்தார்.

செவ்வாய் கிழமை (18) பட்டிருப்பு கல்வி வலயத்தில் நடைபெற்ற பரிசழிப்பு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்

கல்வித்துறையை இலகுபடுத்தல் அதனை மாற்றியமைத்தல், அதற்குள் விஞ்ஞானத்துறையை புகுத்தல் என்பது கல்வித்துiறார் திட்டமிடல் நிபுணர்களின் பணி இதில் யாரும் தலையிடமுடியாது.

இன்று பெரிதும் பேசப்படுவது தரம் ஐந்து புலமை பரிசீல் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிப்பதற்காக காட்சிப்படுத்தப்படும் பாதையை பாடசாலைகளில் காட்சிப்படுத்த வேண்டாம் என கல்வி அமைச்சர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதற்கு சார்பான கருத்துக்களை சிலர் கொண்டிருந்தாலும் எதிரான கருத்துக்களும் உள்ளதனை நான் நன்கு அறிவேன். நான் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டேன் வெற்றிபெற்ற மாணவனை பாராட்டுவதில் என்ன தவறு உள்ளது கல்வி அமைச்சரின் இத்தீர்மானமானது மிகவும் பொருத்தமற்ற ஒன்று இனி வருங்காலங்களில் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழாக்களை வைக்க வேண்டாம் என்றும் கல்வி அமைச்சர் அறிவித்தல் விடுப்பாரோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

இலங்கை கல்வித்துறையினைப் பொறுத்தளவில் அரசியல் தலையீடுகள் கூடுதாலக காலம் காலமாக இருந்து வருகின்றது அரசு மாற்றமடைய மாறடறமடைய, கல்வித்திட்டமும் மாற்றியமைக்கப் படுகின்றது. இது இந்த நாட்டக்கு கல்வித்துறையை பொறுத்தமட்டடில் ஆரோக்கியமற்ற நிலையாகும் உதாரணமாக 1956 ஆண்டு கொண்டுவரப்பட்ட தொழில் கல்வி முறை இற்றைவரைக்கும் அமுலில் இருந்தால் இன்று இளைஞர்கள் தொழில் இல்லா பிரச்சினைக்கு முகங்கொடுக்க நேரிட்டிராது. மியன்மாரில் ஜனநாயக ஆட்சியை மலரச்செய்த பெண்மணி ஒருவர் அனைவரிடமும் கேட்டுக் கொண்டதெல்லாம் நாட்டில் தொழில் கல்வியை உருவாக்குங்கள் என்றுதான்.

ஆனால் இந்தியாவில் கல்வித்துறையானது மிகவும் சுயாதீனமாக இயங்கிக் கொண்டு இருக்கின்றது. அதனல்தான் அமெரிக்காவில் கணணி மையங்களில் பிரதான இயக்கனர்களாக இந்தியர்கள் காணப்படுகின்றனர். எனவேதான் எதிர்காலத்தில் இந்த நாடு கல்வியில் முன்னேற வேண்டுமாக இருந்தால் தேர்தல் திணைக்கம் போன்று கல்வித் திணைக்களமும் சுயாதினமாக இயங்க வேண்டும் என அவர் தெரிவித்தார். 

SHARE

Author: verified_user

0 Comments: