மட்டக்களப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் திங்களன்று வருகை
81.4 மில்லியன் ரூபாவில் விவசாய சேவைக்கால பயிற்சி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு.
திங்களன்று (ஓக்ரோபெர் 24, 2016) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தரவிருக்கும் இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான ஆர். சம்பந்தன் அங்கு இடம்பெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளார்.
சுபவேளையான காலை 10.31 மணிக்கு மட்டக்களப்பு-பதுளைவீதி கரடியனாறில் 81.4 மில்லியன் ரூபாய் செலவுத் தொகையில் நிர்மாணிக்கப்படவுள்ள விவசாய சேவைக்கால பயிற்சி நிலையத்திற்கு அவர் அடிக்கல் நாட்டி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
10 மாத காலத்தில் கட்டி முடிக்கப்படவுள்ள இப்பயிற்சி நிலையம் ஏக காலத்தில் சுமார் 100 அலுவலர்கள் பயிற்சி பெறக் கூடியதாகவும், அதேவேளை சுமார் 40 பேர் வதிவிடப் பயிற்சிகளைப் பெறக் கூடியதாகவும் நிருமாணிக்கப்படவுள்ளது.
இலங்கையில் ஆறாவது மிகப் பெரிய விவசாய ஆராய்ச்சிப் பயிற்சிப் பண்ணையாக இயங்கிய கரடியனாறு விவசாயப் பண்ணை கடந்த 1985 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற யுத்தம் காரணமாக சேதமாக்கப்பட்டு பாழடைந்து தூர்ந்து போனது.

0 Comments:
Post a Comment