மட்டக்களப்பு வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள புணானை காட்டுப் பகுதியில் கானக பயிற்சியில் ஈடுபட்டிருந்த படை
வீரர் ஒருவர் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகிய நிலையில் மரணித்து விட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் புதன்கிழமை மாலை (ஒக்ரோபெர் 19, 2016) இடம்பெற்றுள்ளது.
புணானை படை முகாமில் கடமையாற்றும் பாணந்துறையை சொந்த இடமாகக் கொண்ட ரஞ்ஜித் திஸாநாயக்க என்ற படை வீரரே மரணித்துள்ளார்.
படையினர் தமது வழமையான கானக பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது காட்டுக்குள் இருந்து திடீரென வெளிக்கிளம்பிய தனியன் காட்டு யானை இந்தப் படைவீரரைத் தாக்கியுள்ளது.
காயமடைந்த படைவீரர் உடனடியாக வெலிக்கந்தை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோதும் சிகிச்சை பயனின்றி அவரின் உயிர் பிரிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து வாழைச்சேனைப் பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment