கிழக்கு மாகாணத்தில் குடியிருக்க வீட்டு வசதியற்றிருக்கும் 57 குடும்பங்களுக்கு சுயமாக வீடமைத்துக் கொள்ள நிதியுதவி அளிக்கப்பட்டிருப்பதாக என தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் ஐ.எல்.எம். அக்ரம் தெரிவித்தார்.
இதன்படி இந்த வாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் 22 குடும்பங்களும், திருகோணமலை மாவட்டத்தில் 15 குடும்பங்களும், அம்பாறை மாவட்டத்தில் 20 குடும்பங்களும் தெரிவு செய்யப்பட்டு அவர்கள் உடனடியாக வீடமைப்பு வேலைகளை ஆரம்பிப்பதற்காக தலா 50 ஆயிரம் ரூபாவுக்கான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளன.
வீடுகளைப் பூர்த்தி செய்வதற்காக மொத்தமாக ஒரு பயனாளிக் குடும்பத்திற்கு ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாய் வழங்கப்படவுள்ளது.
மூன்று கட்டமாக இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன. இரண்டாம் கட்டக் கொடுப்பனவான 60 ஆயிரம் ரூபாவும் 3ஆம் கட்டக் கொடுப்பனவான 40 ஆயிரம் ரூபாவும் வழங்கி வைக்கப்படும் என தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கிழக்கு மாகாணப் பணிப்பாளர் ஐ.எல்.எம். அக்ரம் மேலும் தெரிவித்தார்.
எதிர்வரும் டிசெம்பெர் மாதம் 10 ஆம் திகதிக்கிடையில் இந்த வீடுகள் யாவும் பயனாளிகளால் பூர்த்தி செய்யப்பட்டு புதிய வீட்டில் பயனாளிகள் குடிருக்க வேண்டும் என்ற வகையில் கொடுப்பனவுகளை உடனடியாக வழங்கி வைக்குமாறு கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் பணிப்புரை வழங்கியதற்கு அமைவாக வீடமைப்புப் பணிகள் துரிதமாக இடம்பெறுவதாகவும் அக்ரம் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment