16 Oct 2016

பாதுகாப்பான அணுகு முறைகள் தொடர்பான பயிற்சிப் பட்டறை.

SHARE
பாதுகாப்பான அணுகுமுறைகள் தொடர்பான பயிற்சிப் பட்டறை ஒன்று சனி மற்றும் ஞாயிறு (15, 16)) ஆகிய இரு தினங்களிலும் இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத் தொண்டர்களுக்கு மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதய பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
சர்வதேச செஞ்சிலுவைக் குழுவின் அனுசரணையில் நடைபெற்ற இப்பயிற்சிப் பட்டறையில் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க நிருவாகத்தினர், தொண்டர்கள், உத்தியோகஸ்த்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

தொண்டர் சேலையிலீடுபடும்போது எவ்வாறு பாதுகாப்பாக அணுகுவது, சவால்களை எதிர்கொள்ளல், அடையாளப்படுத்தல், தொடர்பாடல், போன்ற பல விடையங்கள் தொடர்பில் இதன்போது பயிற்சிகள் வழங்கப்பட்டன. 

செஞ்சிலுவை அமைப்பின் ரூலா டி சில்வா, அமந்தா, முகுந்தினி ஆகியோர் இதன்போது கலந்து கொண்டு  பயிற்சிகளையும், விளக்கங்களையும் வழங்கினர்.















SHARE

Author: verified_user

0 Comments: