தாய் மற்றும் மகள் மீது தாக்குதல் நடாத்தியவர் என்ற சந்தேகத்தின் பேரில்
கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது…..
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் புதன் கிழமை (14) காலை கணவன் மனைவிக்கிடையில் இடம்பெற்ற குடும்பத்தகராறு காரணமாக கணவன் மனைவிக்கு வாய்ப் பகுதியில் கத்தியால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளார். இந்நிலையில் இவர்களின் சண்டையை தடுப்பதற்காகச் சென்ற அவர்களது மகளுக்கும் கையில் கைத்தி வெட்டப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த தாயும் மகளும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். பின்னர் இவர்கள் இருவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியாசாலைக்கு மாற்றப் பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கணவனைக் கைது செய்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் மேற்கொண்டுள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பொலிசார் தெரிதெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment