அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பகுதியில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைக் காரியாலய திறப்பு விழா இன்று நடைபெற்றது.
தமிழரசுக் கட்சியின் சம்மாந்துறை தொகுதி தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான தவராசா கலையரசன் தலைமையில் இந்த திறப்பு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் குலநாயகம், நிர்வாகப்
பொருலாளர் சபாபதிப்பிள்ளை மற்றும் தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள், தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
வறுமைக் கோட்டின் கீழ் கல்வி கற்கும் மாணவர்களுக்கு மடிக் கணணிகளும் இந்த நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment