8 Sept 2016

பாடசாலைக்குச் செல்லாத ஏழு சிறுவர்கள் சுற்றிவளைப்பின்போது மடக்கிப் பிடிப்பு

SHARE
மட்டக்களப்பு ஏறாவூர்பப்பற்று கல்விக் கோட்டம் 2, கல்குடா கல்வி வலயத்திலுள்ள வந்தாறுமூலைப் பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலைக்குச் செல்லாமல் கூலி வேலைகள் செய்வதோடு அலைந்து திரிந்த ஏழு சிறுவர்களைக்
கண்டு பிடித்து அவர்களை மீண்டும் பாடசாலைக்குச் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ரீ. மதிராஜ் தெரிவித்தார்.

இது விடயமாக அவர் மேலும் கூறுகையில்@ குறிப்பிட்ட சில சிறுவர்கள் சித்தாண்டியில் இடம்பெறும் வாராந்தச் சந்தைப் பிரதேசத்தில் சிறு தொகைப் பணத்திற்கு குப்பைகளை அகற்றும் பணியிலீடுபடுகின்றார்கள் என்ற தகவல் தங்களுக்குக் கிடைத்ததற்கமைய இந்த சிறுவர்கள் ஏழு பேரும் வியாழக்கிழமை (செப்ரெம்பெர் 08, 2016) பிடிபட்டார்கள்.

அத்துடன் இந்த சிறுவர்கள், மற்றும் அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள், சிறுவர்களைத் தொழிலுக்கு அமர்த்தியோர் ஆகியோரை எச்சரித்தாகவும் அவர் கூறினார்.
மேலும், இச்சிறுவர்களில் அதிகமானோர் பெற்றோரின் கரிசனை இல்லாததால் இவ்வாறு பாடசாலைக்குச் செல்லாமல் அலைந்து திரிவதாக அறிய முடிகின்றது.
சிறுவர்களை வேலைக்கமர்த்துவது, சிறுவர்களை பராமரிக்காது விட்டுவிடுவது போன்றவை குற்றச் செயல்களாகும். இத்தகைய செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் வேலைக்கமர்த்துவோர் மற்றும் பெற்றோர் மற்றும் பராமரிப்பாளர்களுக்கெதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் எனவும் அவர் எச்சரித்தார்.

பாடசாலைக்குச் செல்லாத சிறுவர்களைத் தேடும் சுற்றிவளைப்பின்போது ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர், சிறுவர் பெண்கள் பிரிவு அலுவலர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.




SHARE

Author: verified_user

0 Comments: