8 Sept 2016

அச்சுறுத்தலால் தொழில்களை விட்டு வெளிநாடு சென்றவர்களுக்கு மீண்டும் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும்

SHARE
கிழக்கு மாகாணத்தில் வேலை செய்தவர்களில்  பலர்  பயங்கரவாத பிரச்சினை காரணமாகவும், ஆயுதக்குழுக்களின் அச்சுறுத்தலாலும் தமது தொழில்களை விட்டு கடந்த காலங்களில் வெளிநாடு சென்றிருந்தனர்.
அவ்வாறானவர்களுக்கு மீண்டும் அவர்கள் வேலை செய்த இடங்களில் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் குறிப்பிட்டார்.


இவ்விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இதனை தெரிவித்தார்.



மாகாணசபை உறுப்பினர் குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 
பதிலீட்டு தொழிலாளியாகவும், ஒப்பந்த அடிப்படையிலும், இழப்பீடு, தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் கூட்டுத்தாபனம், சபை, திணைக்களம், அமைச்சு போன்ற பல்வேறு இடங்களிலும் வேலை செய்தவர்களே அச்சுறுத்தல் காரணமாகவும், பயங்கரவாத பிரச்சினைகள் காரணமாகவும் தமது தொழில்களை விட்டு வெளிநாடுகளுக்கு சென்றிருக்கின்றனர். 



நாடு திரும்பியவர்களை மீள சேவையில் சேர்ந்து கொள்வது தொடர்பாக 2005க்கு பிறகு 2006, 2013, 2014 ஆண்டுகளில் சுற்றுநிருபம் வெளியிடப்பட்டு 2014ம் ஆண்டு வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதற்கு இடைப்பட்ட காலகட்டத்திற்குள் அண்ணளவாக 20க்கு மேற்பட்டவர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட நிரந்தர சேவைகளுக்கு மீள் நியமனம் வழங்க முடியாது என பொதுச்சேவை ஆணைக்குழு ஊடாகவும் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.


பல தடவைகள் இது தொடர்பில் முறையிட்டும் எவ்விதமான முடிவுகளும் இன்றி பலவருட காலமாக (பத்து, பதினைந்து வருடங்களாகவேலை செய்தவர்கள் தங்களுக்கான தகைமைகள் இருந்தும் 35வயக்கு மேற்பட்ட வயதினையுடையதினால் புதிய தொழில் ஒன்றினை பெற்றுக்கொள்ள முடியாமலும் மனஉளச்சலுக்கும், பொருளாதார கஸ்டங்களுக்கும் உட்பட்டு சொல்லாண்ணாத்துயரங்களை அனுபவித்து வாழ்ந்து வருகின்றதாக குறிப்பிடுகின்றனர்.



இவர்களின் மன உளச்சலுக்கும், பொருளாதார வருமானம் இல்லாமல் நடைபிணங்களாக இருக்கின்ற இவர்களுக்கு கருணை காட்டி நிபந்தனைகளாவது முன்வைத்து திரும்பவும் சேவையில் இணைத்துக்கொள்ள வேண்டும். இதற்கு நல்லெண்ணம் கொண்டகிழக்கு மாகாணத்தில் உள்ள மாகாணசபை உறுப்பினர்கள்  ஆதரவு வழங்க வேண்டும். குறித்த விடயத்தினை மாகாணசபை அமர்வின் போது அவசர பிரரேணையாக முன்வைக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
SHARE

Author: verified_user

0 Comments: