ஏறாவூர் இரட்டைக் கொலை சம்பவ தினத்தன்று நள்ளிரவில் நடமாடிய மோட்டார் சைக்கிள் பற்றிய விவரங்களைக்
கண்டறிவதற்காக பரிசோதனை செய்யும் பொறுப்பு மொறட்டுவைப் பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
படுகொலைச் சம்பவம் இடம்பெறுவதற்கு (செப்ரெம்பெர் 10 நள்ளிரவு 11 அதிகாலை -2016) முன்னரும் அதன் பின்னரும் மோட்டார் சைக்கிளொன்று படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற வீடு அமைந்துள்ள வீதிக்கு அருகில் பலமுறை நடமாடித் திரிவது கண்காணிப்பு காணொளிப் பதிவில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தெருவின் ஒரு புறத்திலுள்ள பலசரக்குக் கடையொன்றின் முன்னால் வீதியைக் கண்காணித்தவாறு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காணொளிப் பதிவில் மோட்டார் சைக்கிள ஒன்றின்; நடமாட்டம் அவதானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்தப் படுகொலை இடம்பெற்ற வீடு அமைந்துள்ள பகுதியின் மற்றொரு பாதையினூடாகவும் குறித்த மோட்டார் சைக்கிள் 4 தடவைகள் நடமாடித் திரிவது கண்காணிப்பு காணொளிப் பதிவில் அவதானிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த மோட்டார் சைக்கிளின் இலக்கம் தெளிவாகத் தெரியவில்லை என்பதால் அது பற்றிய தெளிவான விவரங்களைக் கண்டுபிடிப்பதற்காக கண்காணிப்பு காணொளிப் பதிவின் மூலப்பதிவு மொறட்டுவைப் பல்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment