சுவிஸ்;லாந்திலுள்ள வாசல் செந்தமிழ்ச்சோலை எனும் அமைப்பின் உதவியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசனின்
மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் வைத்து யுத்தத்தம் மற்றும் பொருளாதாரத்தால் பாதிக்கப்பட்ட, தெரிவுசெய்யப்பட்ட 12 பல்கலைக்கழக மாணவர்களுக்குதலா 4500 ரூபா வீதம் 54000 ரூபா நிதி திங்கட் கிழமை (12) வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் இம்மாணர்வகள் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் கற்கும் காலத்தில் மாதந்தோறும் ஒவ்வொருமாணவர்களுக்கும் தொடர்ந்தும் இவ்வாறான உதவிகள் இவ்வமைப்பினூடாக வழங்கப்படவுள்ளன.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசனின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுவிஸ்;லாந்து வாசல் செந்தமிழ்ச்சோலை அமைப்பின் நிருவாக உறுப்பினர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன் , உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.







0 Comments:
Post a Comment