14 Sept 2016

ஏறாவூர் இரட்டைப்படுகொலை தாயும் மகளும் ஒரே குழியில் அருகருகே நல்லடக்கம். இறுதி நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு கதறி அழுகை

SHARE
ஏறாவூரில் ஞாயிறன்று அதிகாலை படுகொலை செய்யப்பட்ட மகள் மற்றும் தாய் ஆகியோரின் பிரேத பரிசோதனைகள் செவ்வாய்க்கிழமை இரவு
நிறைவு பெற்றதும் உடலங்கள் தாமதமின்றி ஏறாவூர் காட்டுப் பள்ளி மையவாடியில் இரவு 9 மணியளவில் (செப்ரெம்பெர் 13, 2016) ஒரேகுழியில் அருகருகே நல்லடக்கம் செய்யப்பட்டன.

ஊரே சோக மயமாகியிருக்க படுகொலை செய்யப்பட்ட இருவரினதும் ஜனாஸாக்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலிருந்து அவர்களது படுகொலை இடம்பெற்ற வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு ஒரு சில நிமிடங்கள் சந்தூக்கில் (காவு பெட்டி) மாற்றப்பட்டபின்னர் உடனடியாக அடக்கம் செய்யப்படும் காட்டுப்பள்ளி மையவாடிக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பிரார்த்தனை நிகழ்வுகள் இடம்பெற்ற பின்னர் தாயினதும் மகளினதும் ஜனாஸாக்கள் ஒரே குழியில் அருகருகே நல்லடக்கம் செய்யப்பட்டன.

பிரார்த்தனை நிகழ்வுகளின் போது உறவினர்கள், உறவினரல்லாதோர் என பலரும் விம்மியழுது புலம்பி நின்றதை அவதானிக்க முடிந்தது. ஏறாவூர் பள்ளி வாசல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினர்,ஊர்ப்பிரமுகர்கள், மற்றும் ஊர்ப் பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஏறாவூர் நகர் முகாந்திரம் வீதி  முதலாவது ஒழுங்கையில் உள்ள வீட்டில் ஒன்றாக வசித்து வந்த நூர்முஹம்மது சித்தி உசைரா (வயது 55) மற்றும் அவரது மகளான ஜனீரா பானு மாஹிர் (வயது 34 ) ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணியளவில் மர்மமான முறையில் பொல்லால் தாக்கப்பட்ட நிலையில
SHARE

Author: verified_user

0 Comments: