மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலய
தீர்த்தோற்சவம் இன்று வெள்ளிக்கிழமை (16) காலை களுதாவளை சமுத்திரத்தில் நடைபெற்றது.
களுதாவளை ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலய வருடாந்த சாந்திகே அலங்கார உத்சவம் கடந்த 11 ஆம் திகதி ஆரம்பமாகியது. தொடர்ந்து 5 நாட்கள் உத்சவம் நடைபெற்று வியாழக்கிழமை (15) பாற்குடப் பவனியும் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை (16) காலை கோபுர தரிசனம் நடைபெற்று சுவாமி தேரேறி ஊர் வீதிகளினூடானச் சென்று களுதாவளைச் சமுத்திரத்தில் தீர்த்தமாடினார்.
ஆலய கிரியைகள் யாவும் சாதக சிரோன்மணி, பிரதிஸ்ட்டா திலகம், சத்தியசதா சிவாச்சாரியார் சிவசிறி.தெ.கு.ஜனேந்திரராஜக் குருக்கள் தலைமையில் நடைபெற்றன.
0 Comments:
Post a Comment