6 Sept 2016

பட்டிருப்பில் 9 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிருமாணிக்கப்பட்ட சிறுவர் நன்னடத்தைக் காரியாலயம் திறந்து வைப்பு.

SHARE
கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தைத் திணைக்களத்தினால் 9 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிருமாணிக்கப்பட்ட சிறுவர் நன்னடத்தைக் காரியாலயம்
செவ்வாய்க் கிழமை (06) மட்டக்களப்பு - பட்டிருப்பில் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இதுவரை காலமும் மட்டக்களப்பிலிருந்து இயங்கிவந்த இக்காரியாலயம் இப்பகுதி மக்களுக்கு தங்களது சேவைகளை விஸ்த்தரிக்கும் நோக்குடன் களுவாஞ்சிகுடி, மற்றும், வெல்லாவெளி ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மக்களுக்கு இக்காரியாலயத்திலிருந்து சேவைகள் வழங்கப்படவுள்ளன. 

இக்காரியாலயத்தினூடாக சிறுவர் பராமரிப்புக்குட்பட்ட அனைத்து சேவைகளும், சிறுவர் பாதுகாப்பு, நீதிமன்ற சேவைகள், சிறுவர் பராமரிப்பு, போன்ற சேவைகள் வழங்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆணையாளர் திருமதி சிவகங்கா சுபீஸ்னர் தெரிவித்தார்.

இப்புதிய காரியாலயம் அமைப்பதற்கு பட்டிருப்பு சித்தி விநாயகர் ஆலயம், பட்டிருப்பு கிராம அபிவிருத்திச் சங்கம், வுழுடயமன் விளையாட்டுக் கழகம், ஆகிய அமைப்புக்கள் இணைந்து, இலவசமாக காணியை வழங்கியுள்ளது.

இதன்போது கிழக்கு மாகாண சுகாதார  அமைச்சர் ஏ.எல்எம்.நஸீர், விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோ.கருணாகரம், ஞா.கிருஸ்ணபிள்ளை, இரா.துரைரெத்தினம், மா.நடராசா, மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் கே.கருணாகரன், சிறுவர் நன்னடத்தைத் திணைக்களத்தின் கிழக்கு மாகாண ஆணையாளர் திருமதி சிவகங்கா சுபீஸ்னர்;,   உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.   


















SHARE

Author: verified_user

0 Comments: