மத்திய அரசிலிருக்கின்ற சில அமைச்சர்கள் மாகாண சபையின் செயற்பாடுகளைக் கொச்சப்படுத்தி, கடந்த காலத்திலிருந்த மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிபோல் கொண்டு வருவதற்கு முனைகின்றார்கள்
ஆனால் நாங்கள் இந்த நல்லாட்சியை மேம்படுத்த வேண்டும் என நினைக்கின்றோம். இவ்வாறான விடையங்களை இந்நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் போன்றோருக்கு ஊடகங்கள் தெரிவிக்க வேண்டும். 37 உறுப்பினர்கள் கொண்ட எமது கிழக்கு மாகாண சபையைக் கொச்பை;படுத்துவது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
என கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்எம்.நஸீர் தெரிவித்தார். கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தைத் திணைக்களத்தினால் 9 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிருமாணிக்கப்பட்ட சிறுவர் நன்னடத்தைக் காரியாலயம் செவ்வாய்க் கிழமை (06) மட்டக்களப்பு - பட்டிருப்பில் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இதன்போது கலந்து கொண்டு காரியாலயத்தைத் திறந்து வைத்துவிட்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் இதன்போது குறிப்பிடுகையில்….
எல்லா விடையங்களும் நல்லவையாகவே நடைபெற வேண்டும் என்பதற்காகத்தாக் நாம் இகடந்த ஆட்சியை மாந்நி தற்போது நல்லாட்சியைக் எற்படுத்த்தியுள்ளோம். நல்லாட்சியிலுள்ள ஒரு சில அமைச்சர்கள் கிழக்கு மாகாண அதிகாரத்தைப் பறித்தெடுப்பதற்கும், மாகாணத்தின் செயற்பாடுகளைக் கொச்சைப்படுத்துவதற்குமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
அம்பாறை அண்மையிலே இங்குறாணையிலே இருக்கின்ற கிழக்கு மாகாண அமைச்சின் கீழுள்ள பொதுச்சந்தைக் கட்டடத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வை முதலமைச்சர் வருவதற்கு முன்பே நல்லாட்சியிலுள்ள அமைச்சர் தயா கமகே வந்து திறந்து வைத்துச் சென்றுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகியி பல கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைத்துள்ள கிழக்கு மாகாணசபைக்கு அமைச்சர் தயா கமகேயின் செயற்பாடு அருவருக்க வைத்துள்ளது.
காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாவடிப்பள்ளியிலே கிழக்கு மாகாண சபையினால் அமைக்கப்பட்டுள்ள பொது நூலகத்தை திறந்து வைக்க வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் திட்டமிட்டிருக்கும்போது இடைநடுவிலே புகுந்து மதிய அமைச்சிலே இருக்கின்ற றிசாட் பதியுதீன் அமைச்சர் 5 லெட்சம் ரூபாய் பெறுமதியான புத்தகங்களை வழங்கி விட்டு அந்த நூலகத்தை திறந்து வைக்க முற்படுகின்றார்.
முதலமைச்சரின் கீழ் உள்ள கிழக்குமாகாண உள்ளுராட்சி அமைச்சில் மத்திய அமைச்சர் றிசாட் பதியுதீன் கைவைக்க நினைப்பதானது பொருத்தமில்லாத விடையமாகும். கடந்த ஆட்சிக்காலத்தின்போதும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் சேர்ந்து இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தவர்தான் இந்த அமைச்சர் றிசாட் பதியுதீன்
மத்திய அரசிலிருக்கின்ற சில அமைச்சர்கள் மாகாண சபையின் செயற்பாடுகளைக் கொச்சப்படுத்தி, கடந்த காலத்திலிருந்த மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிபோல் கொண்டு வருவதற்கு முனைகின்றார்கள் ஆனால் நாங்கள் இந்த நல்லாட்சியை மேம்படுத்த வேண்டும் என நினைக்கின்றோம். இவ்வாறான விடையங்களை இந்நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் போன்றோருக்கு ஊடகங்கள் தெரிவிக்க வேண்டும். 37 உறுப்பினர்கள் கொண்ட எமது கிழக்கு மாகாண சபையைக் கொச்பை;படுத்துவது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. எமது செயற்பாடுகளைக் கொச்சைப்படுத்தும் அளவிற்கு கொண்டு செல்லும் அதிகாரம், அமைச்சு உள்ளிட்ட மாகாணசபையொன்று எமக்குத் தேவையில்லை.
இவ்வாறானவர்களின் செயற்பாடுகள் என்பது எமக்கு கவலைக்குரிய வேதனைக்குரிய விடையமாகவுள்ளது. மாகாணத்தின் அதிகாரத்தை முறியடித்து நல்லாட்சியின் நற்பெயருக்குக் கழங்கம் ஏற்படுத்தும் செயற்பாடுகளை நினைத்து கவலையடைகின்றோம். மக்களின் பிரதிநிதிகள் மக்களின் பிரச்சனைகள் குறித்து பேச வேண்டும். அதனை விடுத்து அதிகாரங்களில் கைவைத்து செயற்படுவதை நிறுத்த வேண்டும்.
மத்திய அமைச்சிலே இரு;ககின்ற அமைச்சர்களின் இவ்வாறான செயற்பாடுகைள ஜனாதிபதி அவர்களும், பிரதமர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் போன்றோர். கவனத்திற் கொள்ளவேண்டும் என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment