உலக சுகாதார அமைப்பின் 69 வது தென் கிழக்குக்கான மாநாடு இன்று திங்கட் கிழமை (05) கொழும்பு தாமரைத் தடாக கூட்ட மண்டபத்தில் மிக
விமர்சையாக ஆரம்பமானது. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின தலைமையில் ஆரம்பமான இம்மாநாட்டிற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
11 நாடுகளின் உயரதிகாரிகள் கலந்து கொள்ளும் இம்மாட்டின் போது சுகாதாரத்துறை புரட்சி பற்றி பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சர், வெளிநாட்டு உயர் அதிகாரிகளின் விசேட உரைகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் அமைச்சர்களான சுசில் பிரமஜேந்த, ரவுப் ஹக்கீம், நவீன் திஸ்ஸநாயக்க பிரதியமைச்சர் பைசால் காசீம் ,கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், கிழக்கு மாகாண சுகாதர அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நசீர், உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சுகாதர அமைச்சர்கள், என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
இம்மாநாடு திங்கட் கிழமை (5)
தொடர்க்கம் எதிர்வரும் 09ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை
இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment