5 Sept 2016

கிழக்கு பல்கலைக்கழகத்திற்குள் கைது செய்யப்பட்டு, காணாமல் போன 158 பேரின் நினைவு தின நிகழ்வு இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

SHARE
மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டு, காணாமல் போன 158 பேரின் நினைவாக ஆண்டுதோறும்
காணாமல் போனவர்களின் உறவினர்களால் நினைவுதினம் உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
இதனை முன்னிட்டு இன்று நண்பகல் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள மட்டக்களப்பு கொம்மாந்துறை பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளுடன் நினைவு தினம் அனுட்டிக்கப்படவுள்ளது.    
கைது செய்யப்பட்டு, 26 வருடங்கள் கடந்துள்ள போதிலும், இதுவரை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காத நிலையில், நினைவு தினத்தை அனுஷ்டிப்பதற்கு கிழக்கு பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை என காணாமல் போனவர்களின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இம்முறையாவது, கிழக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் நினைவு தினத்தை அனுஷ்டிப்பதற்கு அனுமதி தருமாறு பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காணாமல்போன 158 பேரின் நினைவாக நினைவுத் தூபி ஒன்றை அமைப்பதற்கு இடமொன்றை ஒதுக்கித் தருமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஸ்ரீலங்கா இராணுவத்தினர் வந்தாறுமூலை, சுங்கன்கேணி, கறுவாக்கேணி போன்ற கிராமங்களில் 1990 ஆம் ஆண்டு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போது, இப்பகுதிகளில் இருந்த மக்கள் பாதுகாப்புக் கருதி இடம்பெயர்ந்து வந்தாறுமூலையில் உள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்தனர்.
இந்த நிலையில், 1990 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்திருந்த அப்பாவித் தமிழ் மக்கள் 158 பேர் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டு, பின்னர் காணாமல் ஆக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
SHARE

Author: verified_user

0 Comments: