மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்திற்கு புதிய நிருவாகத்தினர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இணையத்தின் தலைவர் எஸ். சிவயோகநாதன் தெரிவித்தார்.
ஞாயிறன்று (31.07.2016) இடம்பெற்ற நடப்பாண்டிற்கான நிருவாகத்திற்கு பின்வருவோர் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தலைவராக எஸ். சிவயோகநாதன், செயலாளர். எஸ். நிரோஷன், பொருளாளர் ரீ. தயானந்தன், உப தலைவர் சோமாவதி சுப்ரமணியம், உப செயலாளர் ஏ.எல்.எம். அப்துல் அலீம் ஆகியோருடன் 14 பேர் கொண்ட நிருவாகக் குழுவும் தெரிவு செய்யப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தில் மொத்தம் 38 அரச சார்பற்ற நிறுவனங்கள் அங்கத்துவம் வகிக்கின்றன.
ஆண்டுக்கொரு முறை அதன் நிருவாகத் தெரிவு இடம்பெறுகின்றது
0 Comments:
Post a Comment