மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள முறக்கொட்டான்சேனைக் கிராமத்தில் 6 கிலோகிராம் பன்றி இறைச்சியை
விற்பனைக்காக வைத்திருந்த மூதாட்டியை தாம் சனிக்கிழமை (ஓகஸ்ட் 06, 2016) கைது செய்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சட்டவிரோதமாக காட்டு விலங்குகள் வேட்டையாடப்பட்டு அதன் மாமிசங்கள் விற்பனைக்காக எடுத்துவரப்;படுவதாக தமக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து திடீர் சோதனை மேற்கொண்டபோது காட்டுப் பன்றி இறைச்சியை வைத்திருந்த முறக்கொட்டான்சேனைக் கிராமத்தைச் சேர்ந்த 70 வயதான மூதாட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.
இறைச்சிக்காக வேட்டையாடப்பட்ட காட்டுப் பன்றி மட்டக்களப்பு மற்றும் பொலொன்னறுவை மாவட்டங்களின் எல்லையிலுள்ள தொப்பிகல (குடும்பிமலை) மலைப்பகுதிக் காடுகளில் இருந்து வேட்டையாடப்பட்டதாகவும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்திருக்கின்றது.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment