18 Aug 2016

நாம் இருளுக்குள் இருக்கின்றோம் இருளைப் போக்க ஆளியை முதலில் தேடவேண்டும்- கிழக்கு விவசாய அமைச்சர் துரைராசசிங்கம்

SHARE
ஒரு விடயத்தை நாம் இருளில் இருந்து தேடுவதைவிட அந்த இருளைப் போக்க ஒளிக்கான ஆளியைத் தேடிப்பிடிக்க வேண்டும். நாம் தேட வேண்டியதைத் தேடாமல் இருப்பதே
எமதுஅறியமை.ஏன கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

செவ்வாய் கிழமை (16) திருகோணமலை ஈச்சிலம் பற்று பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கால் நடைவைத்திய அதிகாரிகாரியாலய திறப்புவிழாவின் போNதுஅவர் இவ்வாறுதெரிவித்தார்.

இதன் போதுஅவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தநாடு சுதந்திர மடைந்து விட்டது என்று நாம் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். 21ம் நுற்றாண்டு வந்துஅதில் இரண்டாவது பத்தாண்டுக்குள் காலடிவைக்கும் காலத்திலும் இன்னும் இந்த அரசாங்கத் திணைக்களத்திற்கான கட்டிடத்தினை அமைப்பதற்கு இடம் தேடிக் கொண்டிருக்கின்றோம் என்று சொன்னால் நாங்கள் திட்டமிடலில் எந்தளவிற்கு வல்லுனர்களாக இருக்கின்றோம் என்பதை சற்றுசிந்திக்க வேண்டும். ஒவ்வொரு இடங்களிலும் என்ன என்ன அமைக்கப்பட வேண்டும் என்கின்ற மாதிரித் திட்டம் அரசஅதிகாரிகளிடம் இருத்தல் வேண்டும். நாங்கள் தேவையில்லாத விடயங்களையெல்லாம் கட்டிப் பிடித்துக் கொண்டு இருக்கும் இடத்தை விட்டு எங்கெங்கோ சென்றுவிட்டோம். 

எங்களுக்குள்ளே இருக்க வேண்டிய சமாதானம், ஒற்றுமை, சகோதரத்துவம் இவற்றையெல்லாம் நாங்க ளேதொலைத்து விட்டு பிறகு நாங்களே தேடுகின்றோம்.

கையிலேநெய் இருக்கவெண்ணைதேடிஅலைபவர்களைப் போல் நாம் இருத்தல் கூடாது. நாம் யார் என்றுசிந்தித்துப் பார்த்தோமேயானால் நாம் தமிழர்கள்,சிங்களவர்கள், முஸ்லீம்கள் என்கின்றவிடயத்தைத் தாண்டிநாம் மனிதர்கள் என்பதைநினைத்துப் பார்க்கவேண்டும். ஆனால் நாம் மனிதன் என்கின்றவிடயத்தைமறந்துபிரிந்து இருக்கின்றோம். தமிழ்ப் பிரதேசத்திற்குஎப்படி முஸ்லீம் அதிகாரி, முஸ்லீம் பிரதேசத்திற்குஎவ்வாறுதமிழ் அதிகாரி,சிங்களப் பிரதேசத்திற்குஎப்படிதமிழ் அதிகாரி,தமிழப் பிரதேசத்திற்குஎவ்வாறுசிங்களஅதிகாரிஎன்றெல்லாம் கேட்காதவர்கள் இந்தநாட்டில் இருக்கின்றார்களோஎன்றுதெரியவில்லை.

நாம் ஏன் இவ்வாறுநினைத்துக் கொண்டிருக்கின்றோம் என்றால் நாங்கள் இன்னும் மனிதனாக இல்லைஎன்பதையேகாட்டுகின்றது. மனிதனாகவாழமட்டும் மனிதனுக்குத் தெரியாதஅளவில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். 

எனவே இந்தநிலைமைகள் மாற்றமடைந்துநாம் மனிதன் அந்த மனிதனுக்குரியஉரிமைகள் மறுக்கப் படுகின்றபோதுஅதுயாராக இருந்தாலும் அதற்காகக் குரல் கொடுக்க வேண்டும். அந்தவகையில் எமது கட்சிபற்றிநாம் பெருமையாகச் சொல்லியே தீரவேண்டும்.

எமது தமிழரசுக் கட்சி இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று ஒன்று சேர்ந்திருக்கின்றோம். உரிமை பறிக்கப்பட்ட எமது சகோதர மலையக மக்களின் உரிமையைக் கோரியே அதன் ஆரம்பம் உதயமானது. அது தமிழர்களுக்காக மாத்திரம் உருவாக்கப்பட்ட கட்சி அல்ல மனிதர்களுக்காக உருவாக்கப்பட்ட கட்சி அடிப்படை மனித உரிமைகளைக் கோரிக் கொண்டிருக்கும் கட்சி.

புத்தளத்தில் முஸ்லீம் மக்கள் தாக்கப்பட்டார்கள் இது தொடர்பில் எந்தவொரு முஸ்லீம் தலைவர்களும் பாராளுமன்றில் குரல் எழுப்பவில்லை. ஆனால் எமது தலைவர்தந்தை செல்வாஅவர்கள் மாத்திரமே இது பற்றி பாராளுமன்றில் குரல் எழுப்பினார். அவர்கள் தங்களுக்கு வாக்களிக்கக் கூடியவர்கள் என்பதற்காக அல்ல எமதுகட்சியில் களமிறங்கி வெற்றியீட்டிய முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடுத்தகனம் எம்மை ஏமாற்றி அரசாங்கத்துடன் இணைந்த சூழ்நிலையிலும் கூட முஸ்லீம் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற செயற்பாடுகளுக்கு எமதுதலைவர் குரல் கொடுத்தார்.

அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நவநீதம்பிள்ளை அம்மணி வருகைதந்தபோது எமது தற்போதைய தலைவர் சம்மந்தன் ஐயா அவர்கள் இந்தநாட்டு முஸ்லீம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கூறியபோது அவர் வியந்துநின்றார். எந்தவொரு முஸ்லீம் தலைவர்களும் இந்த நாட்டில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக நடைபெற்ற விடயங்கள் பற்றி இதுவரை சொல்லவில்லை ஆனால் நீங்கள் சொல்லியிருக்கின்றீர்கள் என்று வியந்தார்.

இவற்றை நான் ஏன் சொல்கின்றேன் என்றால் எமது கட்சிமனித அடிப்படை உரிமைகனை இலக்காகக் கொண்டு செயற்படும் கட்சி எனவே மனித அடிப்படை உரிமைகள் எங்கெல்லாம் மீறப்படுகின்றதோ அதற்காக நாங்கள் எப்போதும் குரல் கொடுப்போம்.

எனவேதான் நாம் அனைவரும் மனிதன் என்கின்ற ரீதியில் மனத செயற்பாடுகளுக்காக சிந்திப்பவர்களாக இருப்போமேயானால் இந்த நாட்டில் ஒரு பிரச்சினையும் இருக்க முடியாது. இப்போது அமைந்திருக்கும் நல்லாட்சியைநாம் இன்னும் நீடித்துக் கொண்டு செல்லவேண்டும் என்று சொல்லுவது இதற்காகத் தான். இபர்போது நாங்கள் மிகச் சிறந்த ஒரு அரசியல் முறைக்குள்ளே வந்திருக்கின்றோம் இதற்கு முன்பு இவ்வாறு இருந்ததில்லை. 

ஓற்றையாட்சி என்றால் தமிழர்களுக்குப் பிடிக்கவில்லை, சமஷ்டி என்றால் சிங்கள மக்களுக்குப் பிடிக்கவில்லை, வடகிழக்கு இணைப்பு என்றால் தற்போது சில முஸ்லீம் அமைப்புகள் கூறுகின்றன அதற்கு நாங்கள் இணங்க மாட்டோம் என்று நாம் எதற்கும் இணங்கமாட்டோம் என்பதல்ல விடயம் எதற்கு நாம் இணங்குவோம் என்பதை சிந்திக்க வேண்டும். இதனைத்தான் நாம் திமிங்கலத் தனமான அறியமை என்று சொல்வோம். இதிலிருந்து நாம் நீங்க வேண்டும்.

ஒரு இருட்டறைக்குள் ஒரு பொருள் இருக்கின்றது இதனை இருக்கின்ற ஒருசிலர் பிரித்தெடுக்க வேண்டும். இதனை எவ்வாறு பிரித்துக் கொள்வது என்பது பற்றிசிந்தித்துக் கொண்டிருக்கையில் இருட்டில் இருந்து எவ்வாறு பிரிப்பது என்கின்ற கேள்வி எழுகின்றது அப்போதுதான் ஒருவன் சொன்னான் முதலில் இருட்டைப் போக்க ஒளிக்கானஆளி இருக்கின்றதா என்பதைத் தேடிப் பிடிக்க வேண்டும் இது தான் எமது அறியாமைநாம் இருட்டில் இருந்துதேடுவதைவிடஅந்த இருளைப் போக்க ஒளிக்கான ஆளியைத் தேடிப்பிடிக்க வேண்டும். நாம் தேட வேண்டியதைத் தேடாமல் இருப்பதே எமது அறியமை.

எனவே நாம் இந்தநாட்டினுடைய எல்லா விதமான இருளையும் அகற்றுவதற்கான ஆளியைக் கண்டு பிடிக்க வேண்டும். வெளிச்சம் வந்தால் நமது பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளாலாம். ஒரு பிரச்சினையை இனத்தின்பால் நோக்காது மனிதன் என்கின்ற ரீதியில் நோக்குவோமேயால் நிச்சயமாக ஒளிஏற்றப்படும் பிரச்சிகைள் சரியான முறையில் இனங்காணப்படும். ஒருவர் ஒரு வரைவிழுங்க வேண்டிய அவசியமில்லை சந்தேகங்களும் இல்லை. 

எனவே இந்த நிலைமையை மாற்றியமைப்பதற்கான சிந்தனையைமக்களே தீர்மானிக்க வேண்டும். மக்களின் மத்தியில் சரியான சிந்தனை தோன்றி விட்டால் அனைத்தும் சரியாகிவிடும் எனத் தெரிவித்தார். 


SHARE

Author: verified_user

0 Comments: