மட்டக்களப்பு - காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த காத்தான்குடி பஸ் டிப்போவுக்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சேவை (S.L.T.B) பஸ் சனிக்கிழமை
அதிகாலை (06.08.2016) தம்புள்ளை-கலேவெல பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளதென்று பொலிஸார் தெரிவித்தனர்.
பயணிகளில் சிலருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவித்த கலேவெல போக்குவரத்துப் பொலிஸார், அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக வேறு பஸ்ஸில் தமது பயணத்தை தொடர்ந்ததாகவும் கூறினர்.
இரவு வெள்ளிக்கிழமை (05.08.2016) இரவு 8.45 மணியளவில் காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்டு சென்ற பஸ் சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் தம்புள்ளை-கலேவல பகுதியில் பயணித்துக் கொண்டிருக்கும் போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியருகிலிருந்த சுவர் ஒன்றின் மீது மோதியே விபத்துக்கிள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலேவெல பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment