மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் எதிர்வரும் 22ஆம் திகதி திங்கட் கிழமை காலை 9.30 மணிக்கு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்
தலைவர்களான இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், பிரதியமைச்சர் அமீர் அலி, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் மற்றும் த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் ஆகியோர் தலைமையில் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்,
கிழக்கு மாகாண சபை அமைச்சர்கள் - உறுப்பினர்கள்,
மாவட்ட திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இவ்வருடத்தில் இரண்டாவது தடவையாக நடைபெறவுள்ள இந்த அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைகளின் முன்னேற்றம்
- பின்னடைவு அதற்கான காரணங்கள், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் - தேவைகள் என்பன தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவ ரும் இராஜாங்க அமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வின்
ஊடகப்பிரிவு செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment