கஞ்சாவை தம்வசம் விற்பனைக்காக வைத்துக் கொண்டு வீதியில் நடமாடிய மூவரை ஞாயிறன்று இரவு (ஜுலை 24, 2016) தாம் கைது செய்திருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான முதலாவது நபரிடமிருந்து 4500 மில்லிகிராம்;, இரண்டாவது நபரிடமிருந்து 4300 மில்லிகிராம்;, மூன்றாவது சந்தேக நபரிடமிருந்து 8000 மில்லிகிராம் கஞ்சாவுமாக மொத்தமாக மூவரிடமிருந்தும் 16800 மில்லிகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
இவர்கள் மூவரும் முறையே 18, 20, 22 வயதுகளையுடையவர்கள் என்றும் மூவரும் ஏறாவூர் - 2, பள்ளியடி வீதியைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நபர்கள் ஏறாவூர் பள்ளியடி வீதியில் உலாவந்தவாறு கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததின் பேரில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 Comments:
Post a Comment