மட்டக்களப்பு
முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட உறவுகளின் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகம் சொந்தமண்ணிலே முதலிடத்தினை பெற்றுக்கொண்டது.
சனி மற்றும் ஞாயிறு (23,24) ஆகிய இரு தினங்களும் நடைபெற்ற உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் 2 6கழகங்கள் பங்கேற்று இறுதிச்சுற்றுப்போட்டிக்கு முனைக்காடு இராமகிருஸ்ணா விளையாட்டுக்கழகமும் கல்லடி யூத் கழகமும் தெரிவாகி இரு அணிகளும் போட்டிக்காக வழங்கப்பட்ட நேரத்திற்குள் எவ்விதமான கோள்களையும் இடதா சந்தர்ப்பத்தில் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதற்காக தண்டனை உதை (பெனாட்டிக்) நடுவரால் வழங்கப்பட்டது. தண்டணை உதையில் இராமகிருஸ்ணா வெற்றி பெற்று முதலிடத்தினை பெற்றுக்கொண்டது.
இரண்டாம் இடத்தினை கல்லடி யூத் அணியும், மூன்றாம் இடத்தினை கொக்கட்டிச்சோலை ஈஸ்வரா அணியும் பெற்றதுடன் சிறந்த விளையாட்டு வீரர், சிறந்த பந்து காப்பாளார், அதிக கோள்களை உள்செலுத்தியவர் போன்றோருக்கு கிண்ணங்களும் வழங்கப்பட்டது.
போட்டியின் இறுதியில் அதிதிகள் மைதானத்திற்குள் அழைத்து வரப்பட்டு சமாதானப்புறாவும் சிறுவர்களால் பறக்கவிடப்பட்டது. மேலும் கேக் வெட்டப்பட்டு நடுவர்களுக்கு சிறுமிகளால் ஏந்தி கொண்டுவரப்பட்ட விளையாட்டுக்கான பந்து மற்றும் ஊதியும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் விளையாட்டு கழகத்திற்காக தங்களை அர்பணித்து உயிரிழந்த உறவுகளின் குடும்பங்களுக்கு அவர்களின் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காக சிறுதொகை பணம் வங்கிக்கணக்கில் இடப்பட்டு வழங்கப்பட்டது.
நிகழ்வினை சிறப்பிப்பதற்காக இசை நிகழ்வும் நடைபெற்றது. கழக தலைவர் பு.தனராசா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர், அதிபர்கள், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள்,
பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 Comments:
Post a Comment