(இ.சுதா)
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய காரியாலயத்தினால் கல்முனைப் பிரதேசத்தின் ஆரோக்கியமான உரிமைகள் மற்றும் கலாசாரத்தை பேணும்
பொருட்டு தொடர்ச்சியாக பயிற்சிக் கருத்தரங்குகளை அரச உத்தியோகத்தர்களுக்கு நடாத்திவருகின்றது.
அதனடிப்படையில் எதிர்வரும் 21 ஆம் வியாழக்கிழமை முற்பகல் 9.15 முதல் பிற்பகல் 3.15 வரைக்கும் சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பான பயிற்சிக் கருத்தரங்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை காரியாலயத்தின் பிராந்திய இணைப்பாளர் இஸ்ஸதீன் லத்தீப் தலைமையில் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் கிறிஸ்ரா இல்லத்தில் நடைபெறவுள்ளது.
செயலமர்வில் அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் மொழி மூலமான கல்வி வலயங்களில் சேவையாற்றுகின்ற ஆசிரியர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள்இ மதகுருமார்கள்இ சிவில் பாதுகாப்பு பிரதிநிதிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
0 Comments:
Post a Comment