7 Jul 2016

சுரவணையடியூற்றுக் கிராமத்தில் ஆரம்பப் பாடசாலை ஒன்றை அமைத்துத் தருமாறு கோரிக்கை.

SHARE
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புக் கல்வி வலயத்திற்குட்பட்ட சுரவணையடியூற்று எனும் கிராமத்தில் ஆரம்பப் பாடசாலை ஒன்றை உருவாக்கித்தருமாறு அக்கிராம மக்கள், கோரிக்கை முன்வைக்கின்றனர்.
இவ்விடையம் தொடர்பில் அக.கிராம மக்க்ள மெலும் தெரிவிப்பதாவது…..

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப்ப குதியான போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள சுரவணையடியூற்று எனும் கிராமம் ஆரம்பிக்கப்பட்ட காலமிருந்து இன்றுவரை அக்கிராமத்தில் ஓர் ஆரம்பப்பாடசாலையும் இல்லாமல் அங்குள்ள மாணவர்கள் மிக நீண்ட தூரம் பயணம் செய்து தொலைவிலுள்ள பாடசாலைகளில் கல்வி கற்று வருகின்றார்கள்.

170 இற்கு மேற்பட்ட குடும்பங்களைக் கொண்ட இக்கிராமத்தின் நடுவில் பாடசாலைக்கென ஓர் காணியும் அக்கிராமத்தவர்களால் ஓதுக்கீடு செய்யப்பட்டு தன்னார்வ தொண்டர் அமை;பொன்றினால் சிறிய கட்டடம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ள நிலையில் தமது கிராம மக்களின் நன்மை கருத்தி பாடசாலை ஒன்றை ஆரம்பிக்கும் நோக்குடன் பல முயற்சிகள் மேற்கொண்டுள்ளபோதிலும் அது இதுவரையில் கைகூடவில்லை என அக்கிராமத்து மக்கள் கவலை தெரிவிக்கின்றர்...

சுரவணையடியூற்றுக் கிராமத்தை ஊடறுத்து பெரிய வாய்க்கால் ஒன்றும் செல்வதனால் அவற்றைக்கடந்துதான் அங்குள்ள மாணவர்கள் ஏனைய அயலிலுள்ள பாடசாலைகளுக்குச் செல்கின்றனர். இதனால் மழை காலங்களிலும், வாய்க்காலில் நீர் நிரம்பியுள்ள காலங்களிலும் பலத்த சிரமங்களையும். எதிர் கொண்டு வருகின்றனர். இவற்றால் பாடசாலைக்குச் செல்லாமல் மாணவர்கள் இடைவிலகியும் வருவதாக அக்கிராமத்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இக்கிராமத்திலிருந்து நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள், தும்பங்கேணி, பழுகாமம், மற்று களுவாஞ்சிகுடி போன்ற பல இடங்களில் கல்வி கற்று வருகின்றனர். இந்நிலமையினைக் கருத்தில் கொண்டு கல்வித்துறைசார்ந்த அதிகாரிகளும் அரசியல்வாதிகளும், ஒன்றிணைந்து, எமது கிராமத்தில் ஓர் சிறிய ஆரம்ப பாடசாலையாவது இவ்வருடத்திற்குள் அமைத்துத்தர முன்வர வேண்டும் என சுரவணையடியூற்றுக் கிராம மக்கள் கோரிக்கு முன் வைக்கின்றனர்.

சுரவணையடியூற்றுக் கிராமத்திற்கு ஓர் ஆரம்ப பாடசாலை தேவை என்பது தொடர்பில் அக்கிராமத்தவர்கள் ஆரம்பத்தில், எம்முடன் தொடர்பு கொண்டிருந்தார்கள், பின்னர் அவர்களது தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது, இருந்த போதிலும் அக்கிராமத்தவர்கள் பட்டிருப்பில் அமைந்துள்ள எமது வலயக் கல்வி அலுவலகத்தின் திட்டமிடல் பகுதிக்கு கடமை நாட்களில் வந்து பாடசாலை ஆரம்பிப்பதற்குரிய விண்ணப்பங்களைப் பெற்று பின்னர் அவற்றைப் பூர்தி செய்து அதனோடிணைந்த ஆவணங்களையும், சமர்ப்பிக்கும் பட்சத்தில் அக்கிராமத்தில் ஓர் ஆரம்பப் பாடசாலை ஒன்றை அமைத்துக் கொடுப்பதற்கு நாம் உதவுவோம் என இவ்விடையம் தொடர்பில் புதன் கிழைம (06) பட்டிருப்பு கல்வி வலய வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயகத்தைத் தொடர்பு கொண்டு கேட்டபோது தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: