மாகாண சபை பரிபாலனத்தின் கீழ் வரும், ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் தங்கும் வாசஸ்தலத்தை புனரமைக்கும்
பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வைத்திய அத்தியட்சகர் எம்.எச்.எம். தாரிக் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டுப் போயுள்ள ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் தங்கும் விடுதி கடந்த ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக திருத்த வேலைகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் பராமரிப்பின்றி இருந்து வந்தது.
அதேவேளை, சமீபத்தில் காலி மாவட்டத்திலிருந்து ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்ட பொது வைத்திய நிபுணரான சமிந்த கொட்டகே என்பவருக்கு வைத்தியர் விடுதி தேவையாக இருந்த விடயம் கிழக்கு மாகாண முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து உடனடியாக வைத்தியர் விடுதியை புனர்நிர்மாணம் செய்து கொடுக்க முதலமைச்சர் 7 இலட்ச ரூபாய் நிதியை ஒதுக்கியிருந்தார்.
சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள் நேரடியாக விஜயம் செய்து ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் திருத்த வேலைகளுக்கு சிபார்சு செய்ததுடன் திருத்த வேலைகள் செவ்வாய்க்கிழமை (ஜுலை 19, 2016) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் தாரிக் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment