கனேடிய மற்றும் இந்திய பல்கலைக்;கழக விரிவுரையாளர்கள் கலந்து கொள்ளும் விசேட அதிதிகள் உரை நிகழ்வொன்று எதிர்வரும் 13ஆம் திகதி புதன்கிழமை மட்டக்களப்பு
கல்லடி சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நடைபெறவுள்ளது.
சமூக விஞ்ஞானங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஜனநாயகம்: சில வினாக்களும் சவால்களும் (The social science, universities and democracy: some questions and challenges) என்ற தலைப்பிலேயே இவ் அதிதி உரை நிகழ்வு நடைபெறவுள்ளது.
அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி ஜெயசங்கரின் தலைமையில், கலாநிதி தர்ஷன் அம்பலவாணரின் ஏற்பாட்டில் எதிர்வரும் புதன்கிழமை மாலை 2மணிக்கு நிறுவக இராஜதுரை அரங்கில் இடம்பெறவுள்ளது.
பேராசிரியர் பவானி ராமன், (வரலாற்று மற்றும் கலாச்சார ஆய்வுகள் துறை, ரொரன்றோ பல்கலைக்கழகம்) மானுடவியல் பேராசிரியர் பிரான்சிஸ் கோடி, (ஆசிய ஆய்வுகளுக்கான நிலையம்) கலாநிதி செந்தில் பாபு, (விஞ்ஞானக் கற்கைள், பிரெஞ்சு நிறுவகம், பாண்டிச்சேரி) ஆகியோர் விரிவுரையாற்றுவர்.
மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியலாளர்கள், மற்றும் ஆர்வலர்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
0 Comments:
Post a Comment