3 Jul 2016

மாணவனின் மரணத்திற்கு நீதி வேண்டி களுவாஞ்சிகுடியில் கண்டனப் பேரணி

SHARE
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் வைத்திய செயற்பாடுகளின் போது  பொறுப்புடன் நடந்து கொள்ளாமைக்கு, எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி கவனஈர்ப்பு போராட்டம்
ஒன்று சனிக்கிழமை ( 02) களுவாஞ்சிகுடியில் முன்னெடுக்கப்பட்டது.

பொது மக்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட  இவ்கவனஈர்பு போராட்டமானது பட்டிருப்பு தேசியபாடசாலை களுவாஞ்சிகுடியில் இருந்து ஆரம்பமாகி பஸ்தரிப்பு நிலையம் வரை சென்று முடிவடைந்தது

பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலத்தில் கல்வி பயின்று வந்த 07 வயது மேகநாதன் மோகவர்மன் எனும் மாணவன் நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 15.05.2016 திகதி   மட்டடக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  உயிரிழந்தார். இவ் உயிரிழப்புக்கு  வைத்தியர்களின் கவனக்குறைவே காரணம் எனக் கோரியே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட உயிரிழந்த மாணவனின் தந்தை மேகநாதன் கருத்து தெரிவிக்கையில் எனது மகன் வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டு பல மணித்தியாலங்கள் களிந்த நிலையிலும்  எவ்வித சிகிச்சைகளும் அளிக்கப்படவில்லை. பின்னர் எனது மகன் வயிற்றுவலி காரணமாக அவதியுற்ற போதும் வைத்தியர்கள் அவ்விடத்திற்கு காலந்தாழ்த்தியே வருகைதந்தனர், வருதந்த வைத்தியர்கள் பெரிய வைத்தியருடன் தொலைபேசியில் உரையாடிய வண்ணமே வைத்தியத்தினை மேற்கொண்ட வண்ணம் காணப்பட்டனர் ஆனால் எனது பிள்ளையை காப்பாற்ற முடியவில்லை வைத்தியர்களின் அசமந்த போக்கே எனது பிள்ளையின் உயிரிழப்புக்கு காரணம் இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் இது போன்று வேறொருவருக்கும் நடைபெறக் கூடாது என இதன் போது தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மௌனக் கொலையா, எனது மகனுக்கு நடந்தது என்ன,பாலகனின் உயிரப்பறிக்காதே, நீதி வேண்டும்,சிறுவரின் வாழ்ழவ சிதைக்காதே, மருத்துவம் செத்துவிட்டதா, போன்ற வாசகங்களை ஏந்தியவாறே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


சம்பவ இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணபிள்ளை ஆகியோர் வருகை தந்திருந்தனர் அவர்களிடம் மகஜர் கையளிக்கப்பட்டது. இது தொடர்பாக சுகாதார அமைச்சரிடம் எடுத்துக் கூறி சட்ட சடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.








SHARE

Author: verified_user

0 Comments: