20 Jul 2016

காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைப் பிரிவு ஆரம்பித்து வைப்பு

SHARE
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவிலுள்ள காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில்
முதன்முறையாக புதன்கிழமை (ஜுலை 20, 2016) சத்திரசிகிச்சைப் பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எஸ்.எம். ஜாபிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு செயலாளர் டாக்டர் மாஹிர், சத்திரசிகிச்சை நிபுணர் ஆர்.டபிள்யூ கமகே,  வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதுவரை காலமும் காத்தான்குடிப் பிரதேசத்திலிருந்து காத்தான்குடி தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டுமாயின் அவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கே அனுப்பி வைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.








SHARE

Author: verified_user

0 Comments: