ஓட்டமாவடி கிராமிய மீனவர் அமைப்பு (ழுனனஅயஎயனல சுரசயட குiளாநசள ழுசபயnணையவழைn) தமது பிரதேச மீன் விற்பனையாளர்கள் சார்பாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் இடம் பல வேண்டுகோள்களை
முன்வைத்துள்ளதாக அந்த அமைப்பின் தலைவர் எம்.எஸ். ஐனுல் புதனன்று (ஜுலை 20, 2016) தெரிவித்தார்.
ஓட்டமாவடியில் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட புதிய மீன் சந்தைக் கட்டிடத் தொகுதியிலுள்ள தேவைப்பாடுகள் குறித்தே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுவிடயமாக முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ள வேண்டுகோளில், மேற்படி கடைத் தொகுதிக்கு குடிநீர் வசதி, புதிய மீன் சந்தைக் கட்டிடத் தொகுதியின் பின்புறத்தை செப்பனிடல், புதிய மீன் சந்தையின் முன்புறத்தில் மழைகாலங்களில் தண்ணீர் தேங்கி சகதியாவதைக் கட்டுப்படுத்த கருங்கல்; தூள் கொண்டு நிரப்புதல், கடைகளுக்குரிய மாதாந்த வாடகையை 2000 ரூபாவாக நிர்ணயித்தல், மீன் விற்பனைக் கடைகளுக்கான குத்தகைக் காலத்தை 10 வருடங்கள் என வரையறுத்தல், மீனவர்களினது பொருளாதார தொழில் ஊக்குவிப்புக்காக வட்டியில்லாக் கடன் பெற்றுக் கொள்ளும் வழிவகைகளை ஏற்படுத்தித் தரல் போன்றன உட்பட இன்னும் பல வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment