மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தக நலன்புரி அமைப்பானது கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்கின்ற பல்லின மக்களின் மேம்பாட்டிக்காக மதவேறுபாடின்றி சேவையாற்றி
வருகின்றமையானது இலங்கைக்கு மாத்திரமல்ல முழு உலகத்திற்கும்ஓர் முன்னுதாரமாகும் என சர்வமதத் தலைவர்கள், புத்திஐPவிகள் பாராட்டியுள்ளனர்.
மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகநலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் செவ்வாய்கிழமை (12) அமைப்பின் தலைவர் பிரபல சமூகசேவையாளர் கே.எம்.எம்.கலீல்(பிலால் ஹாஜி) தலைமையில் ஏற்பாடுசெய்யப்பட்ட இன ஒற்றுமைக்கான நோன்பு பெருநாள் இரவு நேர ஒன்று கூடல ;மற்றும் இராப்போசன நிகழ்வு மட்டக்களப்பு ரெஸ்ட்-இன் ஹோட்டலில் இடம் பெற்றது.
இன ஒற்றுமையை வலியுறுத்தி மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தக நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெற்ற மேற்படி நிகழ்வின் போது நான்கு மதத்தலைவர்களின் விசேட உரைமற்றும் அதிதிகளின் உரையும் இடம் பெற்றது.
பௌத்தசமயம் சார்பாக கல்முனை சுபாத்ராராம விகாராதிபதி ரண்முத்துகல சங்கரத்னதேரர் அவர்களும், கிறிஸ்தவசமயம் சார்பாக மட்டக்களப்பு சிவில் சமூகதலைவரும், கிழக்கு பல்கலைகழக சிரேஷ்ட்டவிரிவுரையாளருமான அருட்தந்தை கலாநிதி டொமினிக் சுவாமிநாதன் அவர்களும் , இந்துசமயம் சார்பாக பல்சமய ஒன்றியத்தின் இந்துசமய குருக்கள் குமாரஸ்தான தேவஸ்தானம் ஜெஹதீஸ்ஸ சர்மாகுருக்கள் அவர்களும், இஸ்லாம் சார்பாக மருதமுனை தாருல் ஹ_தா பெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபர் கலாநிதி அஷ்ஷெய்ஹ் முகம்மதுமுபாறக் (மதனி) அவர்களும் கலந்துகொண்டனர்.
இன ஒற்றுமைக்காக வேண்டி கடந்த 8 ஆண்டுகளாக தனதுசமூகப் பணியினை ஜாதி, மத, குல, பேதம் பாராது பணியாற்றிவரும் மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தக நலன்புரி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாண்டமான நிகழ்வினில் கிழக்கு மாகாணஅ மைச்சர் துரைராஜசிங்கம் அவர்களும்;, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், அரசஉயர் அதிகாரிகள், கல்விமான்கள், புத்திஜீவிகள், வைத்தியகலாநிதிகள், பொறியியலாளர்கள், சிவில் சமூகதலைவர்கள், பல்சமய ஒன்றியத்தின் தலைவர் உறுப்பினர்கள்;, லயன்ஸ் கழக உறுப்பினர்கள், றொட்டறிகழக உறுப்பினர்கள், வர்த்தகசங்க உறுப்பினர்கள், உலமாக்கள், வர்த்தகர்கள், ஊடகவியலாளர்கள் உட்படபலரும் கலந்துகொண்டனர்.
இறுதிநிகழ்வாக இஸ்லாம் என்றால் என்ன என்ற தொனிப் பொருளில் விசேடஉரை ஒன்று மருதமுனைதாருல் ஹ_தாபெண்கள் அரபுக் கல்லூரியின் அதிபர் கலாநிதி அஷ்ஷெய்ஹ் முகம்மதுமுபாறக் (மதனி) அவர்களினால் நிகழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
0 Comments:
Post a Comment